பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் Ꮾ 3

நீதிக்குழு த ந் த து. நடந்துபோன நிலைமைக்காக, இங்கி லாந்து அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர். அமெரிக்க நாட்டு தேசீய கீதம் பாடப் பெற்றது. அமெரிக்க வீரர்கள் தங்கப் பதக்கங்கள் பெற்றனர்.

ஆமாம்! இங்கிலாந்து நாட்டு வீரர்களுக்குத் தந்த தங்கப்பதக்கங்களைத் திரும்பப்பெற்று, அமெரிக்க வீரர்களுக்கு அளித்தனர். இங்கிலாந்து வீரர்களுக்கு இரண்டாம் பரிசும், இத்தாலியiரர்களுக்கு மூன்ரும் பரிசும் வழங்க, மனத்தாங் கல் மாறி, பரிசளிப்பு நடைபெற்றது.

கடமையை சரிவர புரியாது, அவசர முடிவெடுத்த அதிகாரி ஒருவரால், அகில உலகத்தினிடையே குழப்பம் ஏற் பட்டாலும், விளையாட்டுத் துறையில் ஈடுபட்டவர்களுக் கிடையே உலவும் பெருந்தன்மை, அந்த பிரச்சினையைஎளிதாக விட்டுக்கொடுத்து சரிசெய்து, சகோதரத்துவத்தையும் அந்த நீதிக்கு முன்னே அனைவரும் சமம் என்ற கொள்கையையும் நிரூபித்துக் காட்டியது.

தான் செய்த தவறை ஏற்றுக் கொள்ளும் பெருந்தன்மை, அந்தத் தவறினைத் திருத்திக் கொண்டு, அடுத்தவர்க்கு உதவிச் செய்யும் பேராண்மை இரண்டை யும் ஏக காலத்தில் செய்து காட்டிய ஆங்கிலேய அதிகாரிகளின் செம்மாந்த இதயத்தை அனைவரும் பாராட்டினர்.

உணர்ச்சிப் பெருக்கெடுத்தோடும் ஒலிம்பிக் பந்தய நிகழ்ச்சிகளில் இது போல சம்பவங்கள் எப்படியோ இடம் பெற்று விட்டாலும், அறிவு உணர்வோடு அமைதியாக சீர் தூக்கி ஆராய்ந்து, அதைப் பண்புடன் முடிவெடுக்கின்ற பெருந்தன்மை, பேராண்மையின் காரணமாகத்தான், விளை ாட்டுத் துறைக்கு இவ்வளவு சீரும் சிறப்பும் கிடைக்கிறது. அதனுல்தான், அதில் பங்கு பெறுகின்ற வீரர்களும் வீராங் கனைகளும், அதிகாரிகளும், நடத்துனர்களும் ஆன்ற புகழை யும் அரிய மதிப்பையும் பெற்று உலா வருகின்றனர்.