பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள் 75

உலகப் புகழ்பெற வேண்டும், உன்னத சாதனைகளை ஆக்கவேண்டும் என்ற இலட்சியத்தில் அல்லவா இருக்கிருள்! ஒட்டம், தாண்டுதல், எறிதல் போன்றவற்றில் அதிகப் பயிற்சி செய்ய ஆரம்பித்தாள். மாலை நேரம் பயிற்சிக்குப் போதவில்லை என்று, அவள் இரவு நேரங்களில்கூட தனியாக மைதானம் சென்று பயிற்சி செய்ய ஆரம்பித்தாள். அந்தப் பயிற்சி இரவு 9 மணி வரைகூட நீண்டு செல்லும்.

உண்மையான உழைப்பினால்தான் வெற்றி வந்து கிடைக்கும் என்று நம்பினுள். நேரம் கிடைக்கும்பொழு தெல்லாம் பயிற்சி செய்தாள். தன் குறைகளை உணர்ந்தாள். திருத்திக்கொண்டாள். எல்லா நிகழ்ச்சிகளிலும் திறமையை உலகமறியக் கூடிய காலமும் வந்தது.

இதற்கிடையில் அந்தப் பெண்ணின் ஆற்றலைக் கண்டு, ஒரு கம்பெனி, குமாஸ்தா வேலையை தந்தது. மாதம் 75 வில்லிங் சம்பளம் பெற்றுக்கொண்டு, கூடைப் பந்தாட்டத் தில் சேர்ந்து விளையாடியும் வந்தாள். அந்தப் பெண்ணின் பெயர் 15 வயது நிரம்பிய மில்ரட் எல்லா டிட்ரிக்சன். ஆர்வத்துடன் வேலையில் அமர்ந்தாள். வேலை கிடைத்ததும் விளையாட்டு வேண்டாம் என்று ஒதுக்கிவிடவில்லை. மேலும் உற்சாகமாக விளையாட்டில் ஈடுபட்டாள்.

5 அடி உயரமும் 105 பவுண்டும் எடையுள்ள பேபி (Baby), (வீட்டிலேயும் நண்பர்களாலும் அப்படித்தான் செல்லமாக அழைக்கப்பட்டாள்) முதன் முதலாக 1928ம் ஆண்டுதான், கூடைப் பந்தாட்டம் ஆடக் கற்றுக்கொண்டு போட்டி ஆட்டத்திலும் கலந்துகொண்டு முதல் தரமாக ஆடி, அதிக வெற்றி எண்களைப் பெற்றுத் தந்தவள் என்ற பெருமையைப் பெற்ருள்.

கூடைப்பந்தாட்டத்தில் அவள் வேலை செய்த கம்பெனி யின் குழுதான், நாடெங்கும் நடந்த போட்டிகள் அனைத் திலும் வெற்றி பெற்று வந்தது. அதுவே, அமெரிக்க நாட்டுக் குழுவாகவும் மாறி, நாட்டுக்கும் பெருமை தேடித்தந்தது ஏனெனில், அமெரிக்க நாட்டிலே நடைபெறும் தேசிய