பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். நவராஜ் செல்லையா

75

இளைஞன் நிறுத்திவிடவில்லை. ஓடினான். ஓடினான். ஓடிக் கொண்டே இருந்தான்.

1957ம் ஆண்டு வந்தது. இராணுவ வீரர்களுக்கிடையே நடந்த அகில இந்தியப் போட்டியில் 200 மீட்டர் தூரத்தை 21.5 வினாடியிலும், 400 மீட்டர் ஓட்டத்தில் 47.2 வினாடியில் ஓடியபோது, இந்திய விளையாட்டுத்துறை வல்லுநர்களின் ஆழ்ந்த கவனம் அந்த இளைஞனை நோக்கிப் பாய்ந்தது. 1958ம் ஆண்டு 46.6 வினாடி என்று 400 மீட்டர் தூரத்தை ஓடியபோது, இந்தியாவில் இந்த வீரனுக்கு இணையான ஓட்டக்காரர் யாரும் இல்லை என்று போற்றிப் பாராட்டி மகிழ்ந்தது.

1953ம் ஆண்டு ஆசியா கண்டத்திற்கான போட்டி வந்தது. டோக்கியோவில் நடந்த போட்டியின் போது, 400 மீட்டர், 200 மீட்டர் இரண்டிலும் தங்கப்பதக்கம் பெற்று, ஆசியாவிலேயே மிக மிகச் சிறந்த விரைவோட்டக்காரர் என்ற சீரிய புகழைப் பெற்றான் அந்த இளைஞன். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்பார்களே, அந்த நிலையில் இளைஞனின் பயிற்சி மெருகேறியது. வெற்றியும் வந்து குவிந்த வண்ணம் இருந்தது. ஜப்பான் தேசத்து சக்கரவர்த்தியின் ஒப்பற்ற பாராட்டும் கிடைத்ததுமில்லாமல், ஆசியாவிலே சிறந்த ஓட்டக்காரர் என்ற பட்டத்தையும் பெற்றுக்கொண்டு இந்தியா வந்தபோது பிரதமர் நேரு அவர்களும், ஜனாதிபதி ராஜேந்திரபிரசாத் அவர்களும் போற்றி மகிழ்ந்தனர். சிப்பாயாக இராணுவத்தில் பணியாற்றி வந்த இளைஞனின் சேவையைப் போற்றி Jco என்ற அந்தஸ்துக்கும் உயர்த்திக் கெளரவித்தனர்.

இந்த நிலையில் தான், 1960ம் ஆண்டு ரோம் ஒலிம்பிக் பந்தயமும் வந்தது. அதற்குள்ளே அந்த