பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தமிழ்நாடும் மொழியும்


சங்க காலத்தையடுத்த நூற்றாண்டுகளிலே எழுந்த நூல்களாகக் காட்சியளிப்பன சிலப்பதிகாரமும் மணிமேகலையுமாம். இவற்றைப் பாடிய புலவர்களை அரசர்கள் ஆதரித்த தாகத் தெரியவில்லை. காரணம் அவர்களிருவரும் அரசர் தம் ஆதரவு பெறவேண்டிய நிலையில் இல்லை என்பதாகும். எனினும் இளங்கோவடிகள் செங்குட்டுவனின் இளவல்: சாத்தனர் நண்பர். பின்னர் இரண்டு மூன்று நூற்றாண்டுகள் தமிழகம் களப்பிரர் ஆட்சியின்கீழ் இருந்தது. தமிழின் வீழ்ச்சி களப்பிரர் காலத்திலிருந்து தொடங்குகிறது என்ன லாம். களப்பிரர்கட்குப் பின்னர் தமிழகத்தை ஆண்ட பல்லவர்கள் வடமொழி, பாகதம் என்ற அயல் மொழிகளைத்தான் போற்றிக் காத்தனரே தவிரத் தமிழைச் சிறப்பாக ஆதரிக்கவில்லை. பிற்காலப் பல்லவர்களில் நந்திவர்மன் போன்ற ஒரு சிலரே தமிழை ஒரளவுக்கு வளர்க்கலாயினர். பல்லவர் காலம், சோழர் காலம் ஆகிய இரு காலங்களிலும் சமனரும் , பெளத்தரும், சைவரும், வைணவரும் தமிழை வளர்த்தனர். பல்லவர் காலத்திலே சமணர்கள் திராவிட சங்கம் என்றொரு சங்கம் வைத்தே தமிழை வளர்த்தனர். பிறகு முகமதியர் ஆட்சிக் காலத்திலும், விசயநகரப் பேரரசர் காலத்திலும், நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் குறுநில மன்னர்கள் சேதுபதி போன்ருேர்) தமிழை வளர்த்தனர்; சைவ,வைணவ மடங்களும் தமிழை வளர்த்தன. இக்காலத்திலே கல்லூரி களும், அரசியல் கட்சிகளும், தனிப்பட்ட கழகங்களும், தமிழை வளர்த்து வருகின்றன. இவ்வாறு தமிழ் மொழியானது வளர்ந்து வருகின்றது.

சங்க காலம்

சங்க காலத்தினைத் தமிழின் பொற்காலம் என்றே கூறலாம். ஆட்சியிலும் அறமன்றங்களிலும், கலைக்கழகங்களிலும் தமிழ்மொழி தனி நடமும், களி நடமும் புரிந்தது. சங்ககாலத்