பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xviii - சேர்த்துக் கொள்ளலாம். 1971-க்குப் பிறகு வந்த தொகை நூல்களுள், முயற்சியின்றி எளிதில் அறியப் பெற்ற சில நூல்கள் பற்றிய விவரங்கள் மட்டும் தரப்பெற்றுள்ளன. தொகைநூல் கள் எழுதி வெளியிட்டுள்ளவர்கள் விவரம் தரின், அடுத்த பதிப்பு முழு வடிவம் பெறலாம். வரவேற்பு: “கல்வி கரையில கற்பவர் நாள்சில மெல்ல கினைக்கின் பிணிபல” என்றபடி, எல்லா நூல்களையும் எல்லாரும் முழுவதும் படிக்க முடியாதாகையால், தேர்ந்தெடுத்துத் தரப்பெற்றுள்ள சில - பல பாடல்களைக் கொண்டுள்ள தொகை நூல்கள் மிகவும் போற்றி வரவேற்கத் தக்கன அல்லவா? அந்தத் தொகை நூல் களை அறிமுகம் செய்வதே இந்த நூலாகும். அன்பர்களின் - அறிஞர்களின் - ஆராய்ச்சியாளர்களின் நல்லாதரவையும் நல் வாழ்த்தையும் வணங்கி வேண்டுகிறேன். இத்தகைய வெளியீடுகளைப் பல்கலைக் கழகங்கள் செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய நூல் கூடுதலான விலையில் விற்குமா - விற்காதா என வணிக நோக்கில் பாராமல், நற்பணி செய்வது நம் கடன் என்ற நல்ல நோக்கத்துடன் இந்நூலைத் துணிந்து வெளியிடும் மணிவாசகர் பதிப்பகத்தை ஒரு பல்கலைக் கழகம் என்றே கூறலாம். பெருநூல்கள் எழுதும்படி திட்டம் நல்கி பல முறை கலந்து உரையாடிக் கருத்துக்கள் கூறி ஊக்கம் நல்குபவர். பெரு நூல்கள் - ஆய்வு நூல்கள் வெளியிடுவதில் பெருவிருப்பம் கொண்டுள்ள என் இனிய நண்பர் பதிப்புச் செம்மல் பேராசிரியர் டாக்டர் ச. மெய்யப்பன் இதனை மணிவாசகர் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிடும் அவர்கட்கு என்றும் குன்றா நன்றிசெலுத்துகிறேன். வணக்கம். சுந்தரசண்முகனார் 9 – 4 – 1990