பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் பகுதியை ஊன்றி நோக்க வேண்டும். இந்தப்பகுதி யில் உள்ள வழக்கும் செய்யுளும்...... நாடி', 'முந்து நூல் கண்டு முறைப்பட எண்ணி என்னும் தொடர்கள், தமக்கு முன் இருந்த செய்யுள்களையும் நூல்களையும் ஆராய்ந்தே தொல்காப்பியர் நூல் இயற்றினார் என்பதைப் பறைசாற்று கின்றன அன்றோ? இன்னும், இந்தப் பாடற் பகுதியில் உள்ள ‘புலம் தொகுத்தோனே, என்னும் தொடரையும் நன்கு நோக்க வேண்டும். தமக்கு முன்பு உள்ள நூல்களில் விரிந்து பரந்து கிடக்கும் செய்திகளைத் தொல்காப்பியர் சுருக்கித் தொகுத்து எழுதியுள்ளார்’ என்பது, இந்தத் தொடரின் கருத்து. ஆம்! செய்யுள் இலக்கணம் இன்னும் விரிவாகக் கூறப்பட்டிருப்பதா கப் பேராசிரியர் அறிவித்துள்ளார். இதனை, தொல்காப்பியச் செய்யுளியலில் உள்ள வழியெனப் படுவது அதன் வழித்தா கும் என்னும் (95 ஆம்) நூற்பாவின்கீழ்ப் பேராசிரியர் எழுதி யுள்ள, سميم "...தொல்காப்பியம் கிடப்பப் பல்காப்பியனார் முதலி யோர் நூல் செய்தது எற்றுக்கெனின், அவரும் அவர் செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளு மெல்லாஞ் செய் திலர். செய்யுள் இலக்கணம் அகத்தியத்துப் பரந்து கிடந்த தனை இவ்வாசிரியர் சுருங்கச் செய்தலின் அருமை நோக் கிப் பகுத்துக் கூறினாராகலானும்’ என்னும் பகுதியால் அறியலாம். எனவே, தமிழ் மொழியில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே செய்யுள் இலக்கண நூல்கள் பல தோன்றியிருந்தமை புலனாகும். எள்ளா? எண்ணெயா? செய்யுள் இலக்கணம் தோன்றிய பின்னர் செய்யுள்கள் இயற்றப்பட்டனவா? செய்யுள்கள் இயற்றப்பட்ட பின்பு செய் யுள் இலக்கணம் எழுந்ததா? எள் முந்தியதா? எண்ணெய் முந்தியதா? எள் இன்றி எண்ணெய் எப்படி எடுக்க முடியும்? எள்ளே முந்தியது. "எள்ளினின் றெண்ணெய் எடுப்பது போல இலக்கியத்தினின் றெடுபடும் இலக்கணம்”