பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii நன்மாணவர். அறிவுத்திறனும், சிந்தனைத் திறனும், எழுத்துத் திறனும் வாய்ந்த இவர் நூல்கள் தமிழுக்கு அணிகலன்கள் அல்ல; படைக்கலன்கள்! ஆராய்ச்சியாளருக்கு அமைய வேண்டிய அனைத்துப் பண்புகளும் அமையப்பெற்ற திரு. சுந்தரசண்முகனார் நம் காலத்தில் வாழ்வது நமக்குப் பெருமை. அறிவு நலம் சான்ற பெரு நூல்களைப் படைப்பது இவருக்குக் கைவந்த கலை. கூர்த்த மதியும் நினைவாற்றலும் இந்நூல் தொகுப்பிற்கு இவருக்குக் கைகொடுத்துள்ளன. எழுதி எழுதிச் சோர்வதல்ல இவர் தம் இயல்பு. எழுதி எழுதி மகிழ்ந்து இன்புறுவதாகும். இவர்தம் பழுதிலாப் புலமைக்கு இந்நூல் முடி மணியாய்த் திகழ்கிறது. நல்ல நூல்கள் நானூறு வெளியிட்டு நாளும் ஓங்கி உயர்ந்து வளர்ந்து வரும் மணிவாசகர் பதிப்பகத்திற்கு இப் பெருநூல் மேலும் பெருமை சேர்க்கிறது. நாற்பதுக்கும் மேற்பட்ட பெரு நூல் வரிசையில் இந் நூலும் சேருகிறது. ஆயிரம் பக்க அளவில் பெருநூல்களைத் தொடர்ந்து வெளியிடும் பதிப்பகம் எனப் பலரால் பாராட்டப் பெறுகிறது. - பெருந்தொகை செலவிட்டு இத்தொகை நூலை வெளியிடு வதில், தொகை ஒன்றையே கருதாமல் தமிழுக்கு வளம் சேர்க்கும் தொகை நூல் ஒன்று கிடைத்துள்ளது என்று மகிழ் வோம். நுழைபுல மிக்க நூலாசிரியரின் பேருழைப்பும் பதிப் பாசிரியரின் நெடுங்காலத் திட்டமும் இன்று பெருநூலாய் உருப்பெற்று உலா வருகிறது. பெருமலையாய், ஆலமரமாய் இந்நூல் பல்வகை நலன் களைத் தன்னகத்தே கொண்டு திகழ்கிறது என்பதனை ஆழ்ந்து கற்போர் எளிதில் உணர்வர். - Tசீரிளமைத் திறமிக்க செந்தமிழுக்குச் செழுமை சேர்க்கக் கிடைத்த நல்வாய்ப்பை எண்ணிப்பெரு மகிழ்வு'கொள்கிறோம். பெருமிதம் அடைகிறோம். தொகுப்போம்! நல்லவற்றைத் தொடர்ந்து தொகுப்போம்! மொழிக்கு வளம் சேர்ப்போம். புகழ் குவிப்போம் வாரீர். -