பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: உயர் குணம் என்னும் மலையின் மேல் ஏறிநின்ற நீத்தார் சீற்றத்தை, அதற்கு ஆளானவர் ஒருநொடிப் பொழுது அளவுகூடத் தாங்கமுடியாது. புதிய உரை: ஒழுக்கத்தை உயர்வாகக் கொண்டு உயர்ந்தவர், மாறுபட்டுவரும் கோபத்தை ஒருநொடி கூட வைத்திரார். விளக்கம்: ஒழுக்கத்தில் மலையளவு உயர்ந்த துறவர், தன்னிடம் உள்ள குறைகள் அனைத்தையும் கடந்து உயர்ந்திருப்பதால், (மனித இயல்பான) கோபத்தை எப்போதும் படவே மாட்டார். அப்படி அவரை மீறி வந்தாலும் சிறு கணம் கூடத் தங்க விடமாட்டார். விரட்டி விடுவார். அவரால் கோபப்பட முடியாது. ஏனென்றால் அவர் குணக்குன்றல்லவா! கோபம் என்பது தனக்குள்ளே இருக்கும் விருப்பாலும் வெறுப்பாலும் வெளிப்படுகிற உணர்ச்சி செயல். நீத்தாராகிய நிறை குணத்தார் விருப்பு வெறுப்பைக் கடந்தவர். நடுநிலையைத் தொடர்ந்தவரல்லவா? 30. அந்தணர் என்போர் அறவோர்மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான் பொருள் விளக்கம்: மற்று எவ்வுயிர்க்கும் = மனிதர்கள் மட்டு மல்லாது உலகில் வாழ்கிற எல்லா உயிரினங்களுக்கும் செந்தண்மை (துன்பம் தராத) இன்பத்துடன், மகிழ்ச்சி தருகிற மேன்மை செயல்களில் பூண்டு ஒழுகலான் இணக்கமாகி செயல்படுவதால் அறவோர் என்போர் - நீத்தாராகிய நிறை குணத்தார் அந்தணர் = அழகிய தீபமாக ஒளிர்கிறார் சொல் விளக்கம்: அம் - அழகு, நீர் தணல் நெருப்பு, நிழலிடம் தண்மை = குளிர்ச்சி, இன்பம், எளிமை; செம் - செம்மை: செம்மல் = பெருமையிற் சிறந்தோன்; தலைவன்