பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ங் திருக்குறள் புதிய உரை 51 இந்திரன் - இந்திரியத்தை வென்றவன் ; சாலும் = மேன்மை பொருந்துகிற; கரி = விருந்தினன், சான்றாகிறவன் முற்கால உரை: புலன்களிற் செல்லுகின்ற அவர்கள் ஐந்தினையும், அடக்கினானது வலிக்கு அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையுஞ் சான்று. தற்கால உரை: ஐம்புலன்களையும் அடக்கிய நீத்தார் திறத்திற்கு எண்ணற்ற புகழுடம்பாளர்க்கு ஒருபெருந்தலைவனாகக் கூறப்படும் ஐந்திரனே சிறந்த சான்றாவான். புதிய உரை: உடல் பலத்தாலும் மனத்திண்மையாலும் ஐம்புலன்களின் அடங்காத் தன்மையை அவித்தவன் இந்திரன் என்று அழைக்கப்படுவான். பூமியில் அகன்றும் உயர்ந்தும் உள்ள பெருமையிற் சிறந்த தலைவனாக மேன்மை ப்ொருந்தியதால், அவன் எல்லோருக்கும் சான்றாகிறான். விளக்கம்: விந்து விட்டவன் நொந்து கெட்டவன் என்பது முதுமொழி. இந்திரம் இழப்பு என்பது இந்திரியங்களான ஐம்புலன்களின் துண்டுதல் என்பது வெளிப்படை. மூன்று ஆசைகளிலும் பெண்ணாசை முதலில் நிற்பது. ஆகவே, உந்துதல் சக்தி நிறைந்த இந்திரியத்தைக் கட்டுப்படுத்தி வென்றதனால் இந்திரன் என்று சிறப்புப் பெறுகிறான். (உ- ம்) வீரம் மிக்கவன் வீரன். தீரம் நிறைந்தவன் தீரன், விவேகம் உள்ளவன் விவேகன். அதுபோல்தான் இதுவும். புலனடக்கத்தால் பூமியிலும் விரிந்து உயர்ந்த வான்பரப்பிலும் கூட அவன் விருந்தினருக்குரிய வரவ்ேற்பைப் பெறுகின்ற கோமகனாகத் திகழ்கிறான். 4 ஆம் குறளில் உடல் வலிமையால் விளைந்த மனவலிமையால், புலன்களைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார். அதனால் மக்கள் மத்தியிலே விருந்தினனாக (புதியவராக) பூமிக்கும் வானுக்கும் புகழ் பெற்ற தலைவனாக விளங்குகிறான் என்று துறத்தலின் உயர்நிலையைக் காட்டி, அதற்கு உடல் வலிமையே உயிர்நிலையாக விளங்குகிறது என்பதையும் அருமையாகக் குறித்துக் காட்டுகிறார்.