பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - 圖 __ சொல் விளக்கம்: மண்கலம் = மண்கலம் போன்றது நன்கலம் = நன்குப் பயன்படும் பாத்திரம். முற்கால உரை: மனையாளது நற்குண நற்செய்கைகள் ஒருவனுக்கு நன்மை என்றும், நற்புதல்வரைப் பெறுதல் அந்நன்மைக்கு ஆபரணம் என்றும் சொல்லுவார் என்பதாம். தற்கால உரை: இல்வாழ்க்கைக்கு மண்கலம் மனைவியின் நல்லொழுக்க மேயாகும் என்று பெரியோர் கூறுவர். அதற்கு நல்ல அணிகலன் நல்ல மக்களைப் பெறுதலேயாகும் என்றும் கூறுவர். புதிய உரை: இல்லறத்தின் மேன்மை மண்கலம் போன்றது. அதற்கு அடுத்து நல்ல மக்களைப் பெற்றெடுக்கும் பெருமை நன்கலம் ஆவது. விளக்கம்: ஓர் இல்லத்தின் மாண்பு, இல்வாழ்க்கையின் சிறப்பு குடும்ப கெளரவமாகும். அந்தக் குலப்பெருமை மண்கலம் போன்றது. மண்கலம் தவறி விழாமலும், உடையாமலும் இருக்கிறவரை மண்கலம் சிறப்புடையது. உடைந்தால் ஒடுதானே. அதற்காக மண்கலத்திற்கு இல்லறப் பெருமையை ஒப்பிட்டுக் காட்டினார். நன்கலம் என்பது நல்ல அமைப்புடன், திடத்துடன், அழகுடன் இருப்பதாகும். பழுதுபட்ட பாத்திரம், பயன்படாதது மட்டுமல்ல. பழிக்கப்படும். வீசியெறியப்படும். <头鲇 போலவே, குறையில்லாமல் பிறந்த மக்கள், 、妙 லத்தி ன் பெருமைக்கு உரியோர் என்பது மரபு. தாயும் தந்தையும் நலத்தோடு வாழ்கிறபோது, குழந்தைகளும் வலிமையோடும் பொலிவோடும் பிறக்கும். இந்த 9 குறளுக்கும் முத்தாய்ப்பாக, இல்லறத்தின் இன்பத்தையும் அதன் அருள் கொடையான மக்கள் செல்வத்தையும் வள்ளுவர் குறித்திருக்கிறார்.