பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: இல்லறத்து வழுவாது வாழ்பவன். தெய்வத்துள் ஒருவனாக மதிக்கப்படுகிறான். பின்னே தேவனாய்ப் பிறந்து அவ்வறப் பயனை அனுபவித்தல், நிச்சயமாயிருக்கையால், தெய்வத்துள் வைக்கப்படும். o _ தற்கால உரை: உலகில் வாழ வேண்டிய முறைப்படி வாழ்பவன் மேம்பட்ட புகழுலகில் நிலைபெறும் தெய்வங்களுள் ஒரு தெய்வமாக மதிக்கப்படுவான். புதிய உரை: நில உலகில் மன எழுச்சி என்னும் செல்வநிலையைப் பெறுகிற அறன் மிக மேலோங்கிய தெய்வ நிலையில் வைக்கப்படுவான். விளக்கம்: இந்த நில உலகத்தில், மன எழுச்சி என்கிற செல்வ நிலை பெற்றுவாழ்கிற அறன் ஆனவன், மிக மேலோங்கிய பெருமையில் வசிக்கின்ற, காக்கும் குணம் வாய்ந்த தெய்வத்தன்மை நிறைந்த மகா மனிதனாக வாழ்த்தப்படுவான். இந்தக் குறளில் அறன் என்னும் அற மனிதன் தனது ஆன்ற பணிகளால் மகா மனிதனாகப் புகழ் பெறுகிறான் என்னும் முத்தாய்ப்பான கருத்தைப் பொறித்துக் காட்டுகிறார்.