பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 7 7 44. பழிஅஞ்சி பாத்துண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல். பொருள் விளக்கம்: - பழி அஞ்சி = குற்றம் ஏற்படும் என்று பயந்து பாத்து - ஐம்புல இன்பங்களின் ஊண் - அனுபவங்களை உடைத்தாயின் = நடைமுறைகளில் வெளிப்படுத்துகிற போது வழி எஞ்சல் = ஒழுக்கம் குறையாது காத்து வந்தால் எஞ்ஞான்றும் - எப்பொழுதும் வாழ்க்கைஇல் = வாழ்க்கையானது இன்ப வீடாக விளங்கும். சொல் விளக்கம்: பாத்து = ஐம்புல இன்பம், கஞ்சி, சோறு: ஊண் = அனுபவம், உணவு பழி = இகழ்ச்சி, பொல்லாங்கு, குற்றம் எஞ்சல் = குறைதல். இல் = வீடு முற்கால உரை: பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி, அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும், தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத்தான் உண்டலை ஒருவன் இல் வாழ்க்கை உடைத்தாயின், அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தல் இல்லை. = தற்கால உரை: ஒருவன் இல் வாழ்க்கைப் பழிகளுக்கு அஞ்சிப் பகுத்துண்டலைக் கடமையாகக் கொண்டால், அவ் வாழ்வு வாழ் பவனின் வழிகளில், எப்பொழுதும் குறை உண்டாதல் இல்லை. புதிய உரை: குற்றங்களுக்குப் பயந்து ஐம் புல இன்பங்களை நடைமுறையில் குறையாது காத்துவந்தால், எப்போதும் வாழ்க்கை இன்ப வீடாக விளங்கும். விளக்கம்: ஐம்புலன்களால்தாம் அனைத்து நல்லதும் கெட்டதும் நிகழும். ஐம்புலன்களைப் பழி அஞ்சிப் பாதுகாத்து. அவற்றிலிருந்து பெறும்