பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ö50 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: தீமைகளைப் பற்றிச் சந்தேகம் அற, தேகத்தின் மேன்மைபற்றி நன்கு உணர்ந்த அறிஞர்களுக்கு, வையத்தின் அமுதமாகிய மகிழ்ச்சி முழுவதும் அவரோடு கூடவே வாழும். விளக்கம்: வையம், வானம், என்று இரண்டு சொற்கள் இங்கே இடம் பெற்று இருக்கின்றன. வையம் என்பது வாழ்கிற பூமி. வானம் என்பது மழையாகிய அமுதம் சுரக்கும் பூமி. அமுதம் என்றால் மகிழ்ச்சி (அ-அகம், புறம், முதம் - மகிழ்ச்சி) 352 வது குறளில் தேகத்தைப் பற்றித் தெரிந்தவர்க்கு அகமகிழ்ச்சி ஏற்படுமென்றார். ஆனால் இந்தக் குறளில் ஐயம் நீங்கித் தெளிந்துவிட்டால், அக உலகிலிருந்தும், புறவுலகிலிருந்தும் மகிழ்ச்சி பொங்குமென்கிறார். அகமும், புறமுமென்பது ஒன்றில் ஒன்று கலந்தது. அதனால் உடல் சந்தோசமும், மன மகிழ்ச்சியும், ஆன்மாவின் களிப்பும், மெய்நிலையைப் பற்றி முழுதும் உணர்ந்தார்க்கு உண்டாகுமென்று வள்ளுவர் கூறுகிறார். 354. ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லா தவர்க்கு பொருள் விளக்கம்: o - 睡 நீஇ いー so *r-so ξ Φ) ή ங் , II, - ஐயுணர்வு = ஐந்து முக்கிய புலன்கள் (பஞ்சேந்திரியங்கள்) எய்திய - பொருந்தி இருக்கின்ற கண்ணும் - அந்த உடம்பினால் பயமின்றே - பயன் எதுவுமில்லை மெய்யுணர்வு உடல்பற்றிய எல்லா உண்மையான அறிவும். தெளிவும் இல்லாமல், இல்லாதவர்க்கு - தவறுசெய்கிறவர்களுக்கு சொல் விளக்கம்: ஐயுணர்வு ஐம்புலன்கள் (பஞ்சேந்திரியங்கள்) கண் - உடம்பு; பயம் - பயன்; தவர்க்கு தவறுகிறவர்க்கு முற்கால உரை: செல்லப்படுகின்ற புலன்கள் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வு அவற்றை விட்டு, தம் வயத்தாய வழியும் அதனால் பயனில்லையே யாம் மெய்யினை உணர்தல் இல்லாதவர்க்கு.