பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 575 தாகவும். மரணம் (உடற்காயம்) உண்டுபண்ணுவதாகவும் அமைந்து அவனைச் சிந்திக்கும் திறனற்றவனாக்கி விடுகிறது. ஆனால் நற் பயன் விளைவிக்கும் நல்வினைகளோ, உடலோடு பொருந்துகிறது. நிகழ்ந்த தெல்லாம் சரியென்று நினைவை நிமிரவைக்கிறது. வாழ்வை மேம்படுத்துகிறது. 373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றதன் உண்மை அறிவே மிகும் பொருள் விளக்கம்: நுண்ணிய புத்தி கூர்மையைத் தருகிற நூல்பல = கல்வி நூல்கள் பலவற்றை கற்பினும் = மன ஒருமையுடன் கற்றாலும் தன் - ஆன்மாவின் உண்மை அறிவே - உள்ள, உடல், எழுச்சியின் உணர்வுபோலவே மிகும் = மேம்படும் சொல் விளக்கம்: நுண்ணிய புத்தி கூர்மையுள்ள கற்பினும் மன.ஒருமையுடல் தன் - ஆத்மா உண்மை அறிவு - அகமும், புறமும் காணும் எழுச்சி முற்கால உரை: பேதைப்படுக்கும் ஊழ் உடையானொருவன், நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றையும், கற்றானாயினும் அவனுக்குப் பின்னும், தன் ஊழையானாகிய பேதமை உணர்வே மேற்படும். தற்கால உரை: ஒருவன் நுட்பமான பல்வேறு நூல்களைக் கற்றறிந்த போதிலும், அதற்குப் பிறகும் அவனது உண்மையான உள்ள அறிவு முன்வந்து மேம்படுத்தி நிற்கும். புதிய உரை: புத்தி கூர்மையுள்ள ஒருவன் எவ்வளவுதான் மன ஒருமையுடன் குற்றாலும், அவனது ஆன்மா, மனம், உடல் ஆகியவற்றின் பெற்றிருந்த அறிவுதான் மிகுமே தவிர, விரைவாக வேறு எதையும் மேம்படுத்தி விடாது. விளக்கம்: நுண்மை என்பது புத்தி கூர்மை. நூல் என்பது சான்றோர்களின் கருத்துத் தொகுப்பு. கல்வி என்பது அறிவோடு அகழ்ந்து ஆராய்ந்து கற்பது. கற்பு என்பது மனம் ஒன்றிய மன ஒருமைப்பாடு.