பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 450 பார்ப் பார் தம் பண்பாற் றல் என்ன என்பதை மறந்து, ஈனத்தனமான செயல்களில் |றங்கி விட்டால், அதுவே பேரின்பம் என்று மயங்கி விட்டால், அவரது நிலைமை அழிவுதான். அறிவாற்றலும், செயல் ஊக்கமும் கொண்டி மாண்புமிகு தேகம் மரண அவஸ்தைக்குள்ளாகி விடும். ஆகவே, ஐம் புலன்களை வென்று வாகை சூடுகிற பார்ப்பாரையும் களவாசை, கவி ழ்த்து விடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். மனிதர்கள் ஆனவர்கள் மகிமையோடு சிறக்க வேண்டும் என்று 5 வது குறளில் ஆணித்தரமாக அலசிக் காட்டுகின்றார். 286. அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர். பொருள் விளக்கம்: அளவின் கண் = ஞானம் மிகுந்த உடலுடன் நின்றொழுகல் = எப்பொழுதும் ஒழுக்கமுடன் வாழ்வதில் ஆற்றார் = (இயலாமல்) தோற்றவர்கள் களவின் கண் = பிறர் பொருளைக் கவருவதில் ஆசைப்படு கன்றிய = தேர்ச்சிபெற்ற காதலவர் - கொலையாளியாகவும் மாறி விடுவார்கள். சொல் விளக்கம்: அளவு = ஞானம்; கண் - உடம்பு நின்று எப்பொழுதும் ஆற்றார் = தோற்றார், வலிமையில்லாதவர். முற்கால உரை: உயிர் முதலியவற்றை அளத்தலாகிய நெறியின் கண் நின்று அதற்கேற்ப ஒழுக மாட்டார். களவின் கண்ணே மிக்க வேட்கையை உடையாராவர். தற்கால உரை: களவு செய்தற்குப் பேராசை கொண்டவர், தமக்கு வேண்டிய தேவை என்னும் வரம்பில் நின்று, ஒழுங்காக வாழ்வு நடத்தார். புதிய உரை: ஞானம் மிகுந்த உடலுடன், எப்போதும் ஒழுக்கநெறியில் வாழ வலிமையில்லாது தோற்றவர்கள், பிறர் பொருளை அடைகின்ற பேராசையில், கொலை செயலில் ஈடுபடும் வண்ணம் மாறி விடுவார்கள்.