பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 453 +

பிறர் பொருளைக் கவர்ந்ததும் கி கிடைக்கிற எழுச்சிமிக்க - or- 2. - # H - == . o * * * o i வாழி வில், வா Կ օ2| ԼՈ -9} ழி யும். வசதியாக வா ழ கற அவரது 2 L– LL LI LO அழி யும். அவற்றை அழிக் கும் வரை, துக்கமு ம் , o * . - o # !. *†- He . . . . . ... . . . i. o so .. வருத்தமும், துன்பமும் தொடர்ந்து வரும். அதுவும் சந்தேகம் இல்லாமலே வரும் என்பதைக் குறிக்க வீ + யா - வீயா என்றார். வீ என்றால் சாவு. யா என்றால் சந்தேகம், இல்லை என இரண்டு அர்த்தங்கள். சந்தேகம் இல்லாமல் சாவு தான் பரிசு. அதுவும் உடனடியான சாவு இல்லை. துள்ளத்துடிக்க, தொடர்ந்து படுக்க, அடுக் கடுக்கான துன்பங்கள் ஆறாகப் பெருகி, நாறாகக்கிழித்து, நாசமாக்கிவிடும் என்று களவின்கண் காதலை வெளிப்படுத்துகிறார். பிறர் பொருளில் நன்றாகத் தின்று கொழுப்பது மனிதசாதியின் மகத்தான செயல் என்பதைக் குறிக்கவே இன் கண், என்றார். இனிய தோற்றமும் கொழு கொழு செழிப்பும், தளதளப்பும் கொண்டிருப்பார்கள், கொழுத்திருப்பார்கள், பழுத்திருப்பார்கள் என்று கூறுகிற வள்ளுவர், அவர்கள் அழிவு நிச்சயமானது அதுவும் நைந்து நலிந்து, நாசமடைவது உறுதி. ஆகவே, துறவியரும் சரி, இல்லறத்தாரும் சரி, சாவு கொடுக்கும் களவிற்குள் காலை வைக்காதீர்கள் என்று கூறுகின்றார். 285. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப் பொச்சாப்பு பார்ப்பார்கண் இல் பொருள் விளக்கம்: அருள் கருதி = நல்வினை ஆற்றிட சிந்திப்பதும், அன்புடையராதல் = கருணையுடன் மற்றவருடன் இணக்கமாவதும் போன்ற பார்ப்பார்கண் = பண்புகளை உடைய அந்தணரிடத்தும் பொருள்கருதி = பிறரது உடமைகளைக் களவாட தீர்க்கமாகச் சிந்திக்கும் போது; இல் = (அவரது) நற்குணம் அழிந்து போகிறது பொச்சாப்பு - பொல்லாங்கு தான் மிகுதியாகிறது. சொல் விளக்கம்: அருள் நல்வினை, மகிழ்வு; அன்பு - கருணை, பரிவு, பாசம் ஆதல் = இணக்கமாதல்; கருதல் = தீர்க்கமாக ஆலோசித்தல், சிந்தித்தல்; பொச்சாப்பு = பொல்லாங்கு: பார்ப்பார் . அந்தணர், ஆய்ந்தோர், உயர்ந்தோர், வேள்வியாளர் இல் - இல்லை, சாவு.