பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: சிறுகை = சிறுசிறுசெயல்கள்; கூழ் அளாவிய = தம் உடல்மேல் சேர்ந்து பற்றுகிறபோது; ஆற்ற = உண்டாகும் இன்பம் அமிழ்தினும் = உடலினும், உயிரினும் இனிக்கின்ற உவகையை விட மேலானது - முற்கால உரை: தம் மக்கள் சிறுகையளாவிய சோறானது அமிர்தத்தினும் மிகுஇனியது என்பதாம். தற்கால உரை: குழந்தைகளின் கை பட்ட கூழ் பெற்றோர்க்கு அமிழ் தைக் காட்டிலும் இனிமையானதாகவே தோன்றும். புதிய உரை: தம் குழந்தைகள் செய்கிற சிறுசிறு செயல்கள் இன்பமானவை. தம் உடல் மேல் சேர்ந்து பற்றுகிறபோது, உண்டாகும் இன்பம் அவற்றினும் மேலானவை. விளக்கம்: கூழ் என்றால் உணவு என்றும், பொன் போன்ற உடல், பெர்ன் போன்ற பொருள் (உடல்) என்றும், பொருள் உண்டு. கை என்றால் செயல் என்றும் அளாவுதல் என்றால் தடவுதல் கலத்தல் சேர்ந்து பற்றுதல் என்றும் பொருள். தம் மக்கள் செய்கிற சிறுசிறு காரியங்கள் எல்லாம் பெற்றோரின் மேனியுடன் கலக்கிறபோது பேரின்பம் பெய்கிறது. உணவில் கை வைத்து துழாவிய ஒரு செயல் மட்டும் இன்பம் என்று சொல்லாமல், குழந்தைகளின் சிறுசிறு செயல்கள் எல்லாமே பெற்றோரை அகமும் புறமும் பெறுகிற உவகையை மேலும் பெருக்கி பேரானந்தம் பெற வைக்கின்றன. நல்ல குழந்தைகளைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் பெறக்கூடிய பேரின்பத்தை வள்ளுவர் இங்கே குழந்தைச் செயல்களுடன் வடிவமைத்துக் காட்டியிருக்கின்றார்.