பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 34. நிலையாமை அதிகார விளக்கம்: நிலையாமை என்ற சொல்லுக்கு நிலை இல்லாமை என்று எல்லோரும் பொருள் கண்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் நிலையாமெய் என்றதை நிலையாம் + மெய் என்று நான் பொருள் கொண்டு இருக்கிறேன். り H ஏனென்றால் நிலையாம் மெய் என்பதை மெய் நிலையாம் என்று வகுத்துத் தொகுத்து இருக்கிறேன். உடம்பைச் சோற்றால் அடித்த சுவர் என்பார்கள். ஆனால் அது காற்றால் பிடித்த சுவர்தான். காற்றுக்கு ஆத்மா என்று ஒரு பெயர் உண்டு. உடம்பினுள்ளே ஜீவனாக உலவுகிற காற்றாகிய ஆத்மாவை ஜீவாத்மா என்பார்கள். உடம்பிலிருந்து வெளியேறி விடுகின்ற காற்று பரத்திலுள்ள (காற்றோடு) ஆத்மாவோடு கலக்கிறபோது புறக்காற்றைப் பரமாத்மா என்கிறார்கள். ஒருவர் இறந்துபோனால் அதாவது சுவாசிக்கும் சக்தியை இழந்துபோனால் அவர் சிவத்தில் இருந்து சவம் என்ற பெயரைப் பெறுகிறார். அதை மிகவும் மங்கலகரமான சொல்லிலே ஜீவாத்மா பரமாத்மா வோடு கலந்து விட்டது என்கிறார்கள். ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடைப்பட்டுக் கிடக்கின்ற எல்லைகளே வாழ்க்ல என்று பெயர் பெறுகிறது. இந்த உண்மையான நிலையைத் தான் வள்ளுவர் மெய் நிலை என்று கூறவந்து, அவருக்கே உள்ள பாணியில் நிலையாம் மெய் என்றார். அதை எல்லோரும் நிலையாமை என்று எடுத்துக் கொண்டனர். உடலுயிர் பரிக்கும் கொல்லாமை என்ற அதிகாரத்திற்குப் பிறகு உடலுயிர் உறவு என்ற மெய் நிலையின் மேன்மைமிகு அதிகாரத்தை வைத்து இருக்கிறார்.