பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 263 191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். பொருள் விளக்கம்: பல்லார் = அறிஞர் பலர் கூடியுள்ள சபையிலே முனிய - கோபித்து வெறுக்கும்படி பயனில = எதற்கும் பயன்படாத வீணானவற்றை சொல்வானை - பேசுகின்ற பெருமைக்காரனை எல் + ஆரும் = சூரியன் மற்றும் பூமியும் எள்ளப்படும் இழிவுபடுத்த, அழிந்து போவான் சொல் விளக்கம்: பல்லார் = பலர்; அநேகர், சபை; பயனில - எதற்கும் பயன்படாத வான் = பெருமை; படும் அழிந்து போகும் எல் = சூரியன் ஆர் =பூமி முற்கால உரை: அறிவுடையார் பலரும் கேட்டு வெறுப்பப் பயனிலவாகிய சொற்களைச் சொல்லுவான், எல்லோராலும் இகழப்படும். தற்கால உரை: பயனில்லாத சொற்களைச் சொல்லிக் கொண்டே இருப் பவன் எல்லோராலும் எப்பொழுதும் நகையாடப் படுவான். புதிய உரை: அறிஞர்கள் கூடியுள்ள சபையில், எதற்கும் பயன்படாத சொற்களைப் பேசுகின்றவன், அவர்களால் மட்டுமல்ல, வானகமும், வையகமும், இகழ்ந்துரைக்க, அழிந்து படுவான். விளக்கம்: நாவிற்கு இன்பம் இனிப்புப் பண்டங்கள் சுவைப்பதில் மட்டும் இல்லை. பிறரைப் பற்றி புறம் பேசி, இழிவான சொற்களில் ஏசி, கண்டதைக் கதைத்துக் கொண்டிருப்பதிலும் சுகம் காண்கிறது. அது மனிதர்களுக்குரிய மாறாத குணம். தீயானது உறுப்புக்களைச் சுடும் என்பது உண்மைதான். ஆனால் தீய சொற்கள், தீ போல வெளிப்பட்டாலும் நாக்கைத் தீயப்பதில்லை. மாறாக, நாவிற்கு சுகமான உணர்வை நல்குகிறது. இதனால்தான், பேசுகிறபோது, மனத்துக்கு இதம் வருவதுபோல, மற்றவர்களை வதம் செய்வது போல பேசுவது இயல்பாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட இழிவான வீணான