பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2Ꮌ8 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தன்மையும் இல்லாது போவதால், பயன் தராத பொருளாகப் பழித்துப் பேசப்படுகிறது. புறங்கூறுபவருடைய சிந்தனைகள் எல்லாம், பொருமலிலும், பொங்கும் தீம் பிழம் பின் வெம்மையிலும் பங்கப்பட்டுப் போவதால், சிந்திக்கின்ற சிந்தையும் மரத்துப் போகிறது. நல்லதை நினைக்கமறந்து விடுகிறது. அதனால் எந்த நேரத்திலும் தீப் பந்தம் போல எரியும் எண்ணங்களால், அவர்கள் எரிந்து போகின்றனர். கரிந்து போகின்றனர். கரைந்து சாகின்றனர். அதே சமயத்தில், அறங் கூறுகிற அறிவாளன் நோக்கிலே நேர்மையும், நாக்கிலே தூய்மையும், வாய்மையும் தோய்ந்து தொடர்வதால் அவரது பண்பாற்றல், அடுத்தவர்களைக் கவர்கிறது. அவரது செயலாற்றல் மற்றவர்களை ஆனந்தப் படுத்துகிறது. அவரோடு தொடர்பு கொண்டிருப்பதே, அற்புதமான வாழ்வுக்குள் வாழ வைக்கும் என்று எண்ணுகிறபோது, அவரது வாழ்க்கை அணிகலன் பூட்டி அழகு செய்த தேர்போல, அதற்குள் அமர்ந்திருக்கும் தெய்வச் சிலை போல எண்ணப்படுகிறது. ஆக, அறன் நோக்கும் ஆற்றல் கொண்டவர்கள், தேர்போல, தேரில் அமர்ந்து செல்லும் உயர்வைப் பெற்று வாழ்கிறார்கள். தேடிவரும் இப் பெருமையை அறியாமல் புறங்கூறுபவர்கள் பாழாகி விடுகிறார்களே என்று 9 ஆம் குறளில் வள்ளுவர் வருத்தப்பட்டு, திருத்தப் பார்க்கிறார். 190. ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு பொருள் விளக்கம்: தம் குற்றம் = தான் செய்கிற தவறான செயல்கள் ஏதிலார் குற்றம்போல் = மற்றவர்களாகிய அந்நியர்கள், பகைவர்கள் செய்கின்ற தவறுகளைப்போல காண்கிற = அறிவுடன் ஆராய்ந்து நினைத்துப் பார்த்தால் மன்னும் உயிர்க்கு = சேர்ந்து நிலை பெற்றிருக்கிற ஆத்மாவுக்கு பின் தீதுண்டோ= இன்றும் என்றும் எப்போதும் துன்பமே வராது.