பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 387 சொல் விளக்கம்: பொருள் = உடல்: ஆட்சி: மனமுயற்சி, மெய்வலிமை, பழக்கம், அனுபவம் போற்றுதல் = புகழ்தல், பெறுதல், வணங்குதல், வளர்த்தல் இல்லை - சாதல், இப்பிறப்பு, குறைதல், கெடுதல், காய்ந்துபோதல், நாசமடைதல் முற்கால உரை: பொருளாற் பயன் கோடல், அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை. அதுபோல, அருளால் பயன் கோடல் ஊன்தின் பவர்க்கு இல்லை. தற்கால உரை: பொருளாளியாக விளங்கும் தன்மை, அப்பொருளைத் தேடிக் காப்பாற்றாதவர்க்கு இல்லை. அதுபோல், அருளாளியாம் தன்மை புலால் உண்பவர்க்கு இல்லை. புதிய உரை: உடலைக் காவாதார்க்கு, வலிமையும், ஆண்மையும், அழிந்துபோகின்றன. அதுபோல, ஊன்தின்பவர்களுக்குக், கருணையும், கடமை உணர்வும் முயற்சிகளும், அழிந்து போகின்றன. விளக்கம்: பொருளாட்சி, அருளாட்சி என்னும் இரண்டு சொற்களும் மிகமிகப் பொருள் பொதிந்தவை. உடலை வலிமையாக்குவது, மனத்தில் அருளை வலிமையாக்குவது. இந்த வலிமையாக்கும் வேலைக்கு, எதை வலிமையாக்குகிறோம் என்கிற அடிப்படை உணர்வும் ஆர்வமும், ஆக்க பூர்வமான இலட்சியம் வேண்டும். அந்த இலட்சியத்தைக் குறிக்கும் சொல்லாகத்தான் போற்றுதல் என்ற சொல்லைப் பெய்திருக்கிறார். வளர்க்க விரும்புகிற ஒன்றை மதிக்க வேண்டும். துதிக்க வேண்டும். போற்றி ஏற்க வேண்டும். புகழ்ந்து பணியாற்ற வேண்டும். காத்து வளர்க்க வேண்டும். r:: |ப்பொழுது தான் வளர்ச்சி அங்கே பெருகும். பொருளாகிய உடலைப் போற்றி