பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 457 287. களவென்னும் கார்அறிவு ஆண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண் இல், பொருள் விளக்கம்: களவென்னும் பிறர் பொருளை அபகரிப்பதில் கார் அறிவு - மயங்கிப் போனவரின் அறிவும் ஆண்மை = ஆளுந்தன்மையுள்ள உடலும் அளவென்னும் = ஞானம் நிறைந்து ஆற்றல் புரிந்தார் கண் = வலிமையும் பெருமையும் விரும்பிய போதிலும் ; இல் = அழிந்து போகும். சொல் விளக்கம்: காரறிவு = மயக்கம் பொருந்திய அறிவு; ஆண்மை = மெய் அளவு = ஞானம்; ஆற்றல் = வலிமை, பெருமை புரிதல் = விரும்புதல்; இல் = சாவு, இல்லை. முற்கால உரை: களவென்று சொல்லப்படுகின்ற இருண்ட அறிவினை யுடையராதல், உயிர் முதலியவற்றை அளத்தலென்னும் பெருமையை விரும்பினார் கண் இல்லை. தற்கால உரை: வரம்பான வாழ்வு நடத்துதல் என்னும் திறத்தைக் கை கொண்டவர்களிடத்துக், களவு என்று சொல்லப்படும் தீய அறியாமை இல்லை. புதிய உரை: பிறர் பொருளைக் கவர்வதில் மயங்கிப்போன அறிவும் தேகமும் உடையவரது, ஞானம் நிறைந்த வலிமையும் பெருமையும் விரும்பியதன் காரணமாகவே அழிந்து போகும். விளக்கம்: கார் என்றால் அறிவு மயக்கம், ஆறாச்சினம், அஞ்ஞானம். கார் அறிவு என்கிறபோது, ஏதோ ஒரு தீய ஈர்ப்புச் சக்தியால் மயங்கிப் போன அறிவு, மங் கிப் போன திறமை என்று கொள்ளலாம். தீயதை நினைக்கும் பொழுது, தேகத்தின் இயற்கையான செயல் முறைகள் தடுமாறிப் போகின்றன, தறிகெட்டு மாறுகின்றன என்று முந்தைய குறளில் கூறிய வள்ளுவர். க п т:15%», ஏற்பட்டு விடுகிறபோது, ஆற்றலும் வலிமையும் உள் :