பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா = 19. புறங்கூறாமை மாசு நிறைந்தது மனம். அந்த மாசுகள் ஆறு என்பர். காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் என்பார்கள். இந்த அழுக்குகள் ஆறும் அதிகமாக ஆக, மனிதன் தன்னையே மறக்கிறான். தன் தகுதியை இழக்கிறான். அறிவிருந்தும் தவிக்கிறான். சித்திழந்து, பித்தனாக மாறுகிறான். அதைத்தான் 17 வது அதிகாரமாக அழுக்காறாமை என்று பாடி வைத்தார். அழுக்குப் பொறாமையால் புழுங்கிச் சாகிறபோது, அடுத்தவர்களுக்கு அல்லல்களை உண்டு பண்ண ஆயத்தமாகி விடுகிறான் அந்த ம்னிதன். பொறாமையில் எரிந்து கொண்டிருப்பவன், எதைப் பார்த்தாலும் எதிர்த்து விட வேண்டுமென்று அவாவி, மேலும் மேலும் தன்னை எரித்துக் கொள்கிறான். தனக்குள்ளே மரித்துக் கொள்கிறான். அழுக்காறாமையின் ஆவேசமாக, அடுத்தவர்களின் உடைமையை அபகரிக்க வேண்டும். அவதிக்குள்ளாக்க வேண்டும் என்னும் ஆசையின் ஆவேசம்தான், வெஃகுதலாக வெளிப்படுகிறது என்பதால் 18 வது அதிகாரமாக வெஃகாமை என்று வைத்துப் பாடினார். செயல் மூலமாக அதாவது திருட்டின் மூலமாக இருட்டான மனத்துக்கு இன்பம் பெற முயன்றும், எண்ணியதும், எதிர்மாறாகப் பண்ணியதும் புண்ணியமில்லையே என்று புழுங்கியதின் விளைவே மனிதனுக்கு ஆயுதமாக விளங்கும் நாக்கைப் பயன்படுத்திக் கொண்டனர். அந்த நாக்கின் நச்சுச் செயல்தான அவதூறு பரப்புவது. யாரோ தெரியாதவன் ஒருவன் மேல் யாரும் பகை கொண்டு விடுவதில்லை. நேற்றைய நண்பன் இன்றைய எதிரி. இன்றைய நண்பன் நாளைய பகை என்பது போல அவனைச் சுற்றியிருந்த நட்பே, உறவே, சுற்றமே இன்று புறமாகிவிட்டது. அவர்கள் நம்பிக்கையுடன் கூறியிருந்த ரகசியங்களை எல்லாம் வெளிப்படுத்தி அவமானப்படுத்தி மகிழலாம் என்ற மனித குணத்தின் மகா வெறியைக் காட்டத்தான் 19ஆம் அதிகாரமாக புறங்கூறாமை என்று வைத்தார். உற்றவராயிருந்தவர்கள் உரைத்த இரகசியங்களை, பொறாமையால் வெளிப்படுத்துதல் பாவம் என்று இதில் கூறுகின்றார்.