பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/451

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

450 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 283. களவினால் ஆகிய ஆக்கம் அறவிறந்து ஆவது போலக் கெடும் பொருள் விளக்கம்: களவினால் = பிறர் பொருளை அனுமதியின்றி மறைவாகக் கவர்ந்ததால் ஆகிய ஆக்கம் = பெற்ற வாழ்வின் எழுச்சியானது ஆவது = அதிகமானாலும் அறவிறந்து = முற்றும் முழுதுமாக ஒழிக்கப்பட்ட போலக்கெடும் = புதர் போல அழிந்துபோகும். சொல் விளக்கம்: ஆக்கம் = வாழ்வு, எழுச்சி, அற = முற்றும் முழுதுமாக இறந்து = அழிதல்; போல் = புதர், போல அறவிறந்து = எல்லைகடத்தல் முற்கால உரை: களவினால் உளதாகிய பொருள், வளர்வது போலத் தோன்றித் தன் எல்லையைக் கடந்து கெடும். தற்கால உரை: திருட்டினால் உண்டாகின்ற செல்வம், அளவில்லாமல் வளர்வது போலத் தோன்றினாலும், விரைவில் அழிந்து போகும். புதிய உரை: பிறர் பொருளைக் கவர்ந்து பெற்ற வாழ்வானது, எழுச்சி போலத் தோன்றினாலும், முற்றும் முழுதுமாக ஒழிக்கப்பட்ட புதர்போல அழிந்து போகும். விளக்கம்: திருடிப் பெற்ற, பிறர் பொருளைக் கவர்ந்து பெற்ற செல்வம் என்றே எல்லோரும் பொருள் கொண்டதை, நான் கவர்ந்து பெற்ற ஒரு எழுச்சி மிக்க வாழ்வு என்று கொண்டிருக்கிறேன். பெரிதும் பெற்ற வேட்கையாலும், வெறியாலும், வவ்விய மற்றவர்கள் உடமையும் பொருளும், ஒருவரிடம் அடை கிறபோது, பெறுகிறவர்களுக்குப் பேரதிர்ச்சியும், பேகுணர்ச்சியும், பெருமை மேலோங்கிய புது உணர்ச்சியும் எழுவது இயற்கைதான். அதைக் குறிக்கத் தான் வள்ளுவர், ஆக்கம் என்னும் ஒரு சொல்லைப் படைத்து வைத்தார். வாழ்வு, எழுச்சி, பெருக்கம் விருத்தி, செல்வம் என்பதாக ஆக்கத்திற்குப் பொருள் கொள்ளலாம்.