பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: சினம் சேர்ந்தாரைக் கொல்லும் என்னும் பழமொழியை மிக ஆழமாக வள்ளுவர் சொல்கிறார். ஒருவருக்குச் சினம் ஏற்பட்டு விட்டால், அவர்தன்னை மறக்கிறார். தன் தகுதியை இழக்கிறார். தன் திறமையை அழிக்கிறார். ஒரு தேவையற்ற செயலைச் செய்யத் துடிக்கிறார். ஆகவே, பாறையிலே தலையை மோதினால் மண்டை உடையும், பனியிலே மோதினால் மயக்கம் வரும் என்பதுபோல, தன்னைவிடப் பலமுள்ள பகைவரிடம் மோதுகிறபொழுது அது பாவச் செயலாகி விடுவதால், அதற்குப் பரிகாரமாக மரணமே சம்பவிக்கிறது. அதுபோலவே மெலிந்தவரிடத்தில் மோதினாலும், உடலுக்கும், வாழ்வுக்கும் ஊறு விளைவிக்கக் கூடிய தீயவைக ளே தொடர்நிகழ்ச்சிகளாகத் தோன்றும். ஆகவேதான் எழுகிற கோபத்தை வலியார் மேலும் காட்டக் கூடாது. எளியார் மேலும் காட்டக் கூட்டாது, என்று வீரத்தைக் காக்கின்ற விவேகமும் வேண்டும் என்றும் இரண்டாம் குறளில் வள்ளுவர் வழிகாட்டுகிறார். 303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய பிறத்தல் அதனான் வரும். பொருள் விளக்கம்: யார்மாட்டும் - எவரிடத்திலும் வெகுளியை - தணியாப் பெரும் கோபத்தை மறத்தல் = (வெகுளியை மறத்தல்) விட்டு விடவே ண்டும். இல்லை என்றால் தீய பிறத்தல் = மரணவேதனைகள் உண்டாவது அதனால் = மிகுதியாக வரும் = தொடர்ந்து வந்து சேரும் சொல் விளக்கம்: மறத்தல் - விட்டுவிடல், பொல்லாங்கு வெகுளி = தணியாக்கோபம்; தீய தீது, மாண வேதனை அதனால் - மிகுதியாக முற்கால உரை: o, 7,

  • _* *

யாவர்மாட்டும் வெகுளியை ஒழிக்க ஒருவர் தீயனவெல்லா முளவாதல் அதனால் வரும் ஆதலால்