பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 314. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல் பொருள் விளக்கம்: இன்னா செய் - கேடுகள் விளைவிப்போர் தாரை - நேர்வழி செல்லுமாறு ஒறுத்தல் = அடக்குதல் அவர் நாண - அவர் அடங்கி பின்னடைய நன்னயம் - இன்சொல், மற்றும் இனிய செயல்களில் செய்துவிடல் - குற்றத்தை விடுமாறு செய்ய வேண்டும் சொல் விளக்கம்: தாரை= ஒழுங்கு, நேரோடல் ஒறுத்தல் = அடக்குதல், அலைத்துக் குறைத்தல் நாண = அடங்க, அஞ்சிப் பின்னிட நன்னயம் - இன்சொல், செயல்கள்; விடல் - விடுதல், குற்றம் முற்கால உரை: தமக்கு இன்னாத வற்றைச் செய்தாரை துறந்தார் ஒருத்தலாவது, அவர்தாமே நாணுமாறு அவருக்கு இனிய உவகைகளைப் செய்து, அவ்விரண்டினையும் மறத்தல் ஆகும். தற்கால உரை: தனக்குத் துன்பம் கொடுத்தவரை தண்டித்தலாவது, அவர் வெட்கப்படும் படியாக, நல்ல நன்மைகளைச் செய்து அவர் செய்த தீமைகளையும், தான் செய்த நன்மைகளையும் மறந்துவிடல். புதிய உரை: கேடு விளைவித்தவர்கள் நேர்வழி நடக்குமாறு அடக்குதல், அவர் அடங்கி, அஞ்சிப் பின்னடையுமாறு, இனிய சொற்களாலும், செயல்களாலும் குற்றத்தை விடுமாறு செய்ய வேண்டும். விளக்கம்: இன் ன்ா செய் தாரைத் தண்டித்தல் என்றுதான் இதுவரை எல்லோரும் உரை செய்து இருக்கிறார்கள். அவர் நான, அதாவது அவர் வெட்கப்படும்படி என்றும் பொருள் கண்டு இருக்கிறார்கள். இங்கே நான், செய்தாரை என்ற சொல்லில் இருந்து தாரை என்ற சொல்லைப் பிரித்து இருக்கிறேன்.