பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வைப்பர் - வைத்துப் பேசுவர் பொறுத்தாரை - பொறைப் பண்பால் காத்தவரை வைஆரே - எஃகு, வைரம் போன்று பொன்போற் உடலைப்போல பொதிந்து = மிகுதியாகக் காக்கப்படுவார் சொல் விளக்கம்: ஒறுத்தார் = அழித்தவர், தண்டித்தவர் வை = கூர்மை, வைரம், எஃகு, அறிவு, மேன்மை பொன் = உடல், திரவியம், திரவியம் என்கிற இயற்கை. முற்கால உரை: பிறர் தீங்கிற்காக அவரை ஒறுத்தாரை, அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துக் கொள்ளார். அவரைப் பொறுத்தாரை இடைவிடாது பொன்போல் மனத்துள் கொள்வர். தற்கால உரை: அறியாமல் செய்த தவற்றைப் பொறுத்துக் கொள்ளாமல், தண்டித்தவர்களை உலகத்தார் ஒரு பொருட்டாக மதிக்க மாட் டார்கள். ஆனால், பொறுத்துக் கொண்டவர்களைப் பொன்னைப் போற்றுவது போல, மனத்தில் வைத்துப் போற்றுவார்கள். புதிய உரை: தீங்கிழைத்தவர்களையும் தண்டிப்பவர்களையும் (ஒன்றாகவே) ஓரினமாகவே வைப்பார்கள். ஆனால் பொறையாளர்களை வைரம் பாய்ந்த உடலாளராகவும், அறிவாளராகவும் போற்றிக் காப்பார்கள். விளக்கம்: அறியாமல் செய்தாலும் அறிந்து செய்தாலும் தீமை தீமைதான். அப்படிப்பட்ட தீங்காளருக்கு எதிராகத் தண்டிப்பவர்கள் தீங்காளருக்குச் சமமான ஓரினம், ஒரே தன்மையானவர் என்றே ஒப்பிட்டுப் புறத்தில் வைப்பார்கள் உயர்ந்தவர்கள். ஆனால், பொறையால் வெல் கிற ஒருவரை அறிவாளர், ஆண்மையாளர், ஆற்றலாளர், வல்லமையாளர் என்று போற்றுவார்கள். வை என்பது கூர்மை. கூர்மை என்பதற்கு எஃகு, வைரம் என்று பொருள். பொன் என்றால் உடம்பு என்று பொருள். வைரம் பாய்ந்த உடம்பாக வசீகரம் வாய்ந்த பண்பான மனதாக