பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 35. துறவு கள்ளாமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொல்லாமை, நிலையாமை போன்ற அதிகாரங்களில் தீமை பயக்கும் முறைகளை எல்லாம் தொகுத்துச் சொல்லிக் கொண்டு வந்த வள்ளுவர், அடுத்ததாகத் துறவு என்ற அதிகாரத்தை வைத்திருக்கிறார். நல்லறம் நடத்த வேண்டிய அறனாகிய இல்லறத்தான், ஒழுக்கத்தை அழுக்குப் படுத்துகிற காரியங்களைத் தவிர்க்க வேண்டும். நீக்கவேண்டும் என்ற சொல்ல வேண்டிய கடமை உணர்வால், துறவு” என்னும் அதிகாரத்தை வைத்து இருக்கிறார். துறவு என்றால், நீத்தல், சந்நியாசம் சாமியார் ஆகிவிடுவிகுதல், இல்லறம்துறத்தல் என்றுதான் பலரும் பொருள் கூறியிருக்கிறார்கள். அது உலக நடைமுறை என்றாலும், துறவுக்குரிய உண்மையான பொருள் கீழ்க்கண்டவாறு அமைகிறது. துறவு என்ற சொல், துற+வு- என்று பிரிகிறது. துற' என்றால் கைவிடு தவிர் என்று அர்த்தம் 'உ' - என்றால் அகச்சுட்டு, புறச்சுட்டு என்று குறிக்கின்றன. அகத்தில் உள்ள மாசுகளையும், புறச் செய்கைகளான இழி செயல்களையும், தவிர்க்க வேண்டும் என்பதைக் குறிக்கத்தான், துறவு - என்ற சொல்லை வள்ளுவர் பொறித்து இருக்கிறார். மாசுகள் மனத்தையும், இழி செயல்கள், நலத்தையும், குலத்தையும், ஆன்மாவின் அகத்தையும் அழித்துப் போடும் என்பதால் தான், தூயனவற்றை கைக் கொள்ளுங்கள் நீங்கள் தீயனவற்றைத் துறவுங்கள். மனதை நேர்மைப் படுத்துங்கள் உடலைச் சீர்மைப் படுத்துங்கள். ஆன்மாவைத் தூய்மைப்படுத்துங்கள் என்பதாகத்தான் துறவு என்ற அதிகாரத்தைத் தொடர்ந்து வைத்திருக்கிறார்.