பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 407 தானே வருவித்துக் கொள்ளும் துன்பமா? வேண்டுமென்றே இழைக்கும்.துன்பமா? தெரியாமல் செய்து விடுகிற துன்பமா? எதைப் பொறுத்துக் கொள்வது என்று தெளிவாக்க வில்லை. இயற்கையால் வருகின்ற துன்பம்; விலங்குகளால் விளைகின்ற துன்பம்; விடக் கிருமிகளால் ஏற்படுகின்ற துன்பம்; பகைவர்களால் ஏற்படுகின்ற துன்பம்; தனமன ஒருமைப்பாட்டை குலைக்கின்ற வழிகளில் உண்டாகும் துன்பம். தான் பாதிக்கப்படும் பொழுதெல்லாம், தவிர்க்க முடியாத கோபம் வரும். அதைப் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால், மன ஒருமை உடைமையை விளக்கும் தவத்திற்குப் பங்கம் ஏற்படுகிறபோது, விளைகிற கோபம் வேகமானது. அந்த வேகத்தையே விவேகத்தால் பொறுத்து அடக்கிட வேண்டும். அடக்குவது மட்டும் போதாது. பிற உயிர்களுக்குத் தம்மால் துன்பம் தோன்றி விடக் கூடாது. அடக்க முடியாத கோபத்தால், ஏதாவது விபரீதம் வரவே கூடாது என்பதற்காகத்தான் உறுகண் என்றார் வள்ளுவர். தான் எதிர்த்து செய்யும் செயல்ால், பிற உயிர்களுக்குத் துன்பமோ, நோயோ, அச்சமோ, தரித்திரமோ ஏற்பட்டு விடக்கூடாது. அப்படி அமைகிற இரண்டு செயல்பாடுகளும், தவத்திற்கு உடல் போல, உயிர் போல என்று கூறுகிறார் வள்ளுவர். பிறர் பிழை பொறுப்பது உடல் போல, பிறருக்குத் துன்பம் இழைக்காமல் இருப்பது உயிர்போல. ஆகவேதான், தவத்திற்கு உடலாகவும் உயிராகவும் இருக்கின்ற இனிய காரியங்களை, இலக்கணமாக்கி, இலக்கிய நயத்துடன் வள்ளுவர் முதல் குறளாகத் தந்திருக்கிறார். 262. தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது. பொருள் விளக்கம்: தவம் - இயம நியமத்துடன் மேற்கொள்கிற தவமானது தவமுடையார்க்கே = மன ஒருமை உடையவர்க்கே ஆகும் நிறைவேற்ற இயலுகிற காரியமாகும்.