பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள்-புதிய_உரை 315 o o o விளக்கம்: மனிதன் என்பவன் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும். அப்படியே நிதமும் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகும். ஆனால், தனிமனிதனுடன் சேர்கிற துணையும், சுற்றி வரும் உறவும் அப்படி விட்டு விடுவதில்லை. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்று கூறுகிற அளவுக்குச் சுற்றமும் உறவும், சுருட்டி வளைத்துத் தொந்தரவுகள் உண்டு பண்ணுவது, மனித இனம் தோன்றியதிலிருந்து தொடர்ந்துதான் வருகிறது. ஒழுக்கமாகிய அறத்தில் வாழும் அறன், துணை நலம் பெற்று இல்லறத்தில் ஈடுபடுகிறபோது, தேடிவருவது இன்பம் மட்டுமல்ல. இன்பத்தை விரட்டும் துன்பச் சூழ்நிலைகளும் தாம். அதைத்தான் இல் பருவம் என்கிறார் வள்ளுவர். இல்லறத்து நிலைமை என்றும் கூறலாம். இல்லாத நிலைமை என்றும் கூறலாம். இடன் என்றதும் செல்வம் என்றுதான் பொருள் கொள்கிறோம். செல்வம் என்பதற்கு வாழ்க்கை, செழிப்பு, சீர், இன்பம், பெருக்கம், நுகர்ச்சி, பாக்கியம் என்றெல்லாம் பொருள்கள் உள்ளன. இடன் என்பதற்கு நல்ல காலம் என்றும் பொருள் உண்டு. ஒப்புரவாளர் வாழ்க்கையில் நல்ல காலம் இல்லாமல், அதனால், அவரது வாழ்க்கையில் சீரும் சிறப்பும், இன்பமும் ஏற்றமும், நுகர்ச்சியும் மலர்ச்சியும், செழிப்பும் கொழிப்பும், ஆக்கமும் பெருக்கமும், வாக்கியமும் போன்ற பல நிலைமைகள் மாறிப் போவதைத்தான் இல்பருவம் என்றார். அதனால் அறிவுள்ளவர்கள் கலங்கிவிட மாட்டார்கள். அதன் காரணத்தை அறிவார்கள். அதைத்தான் கடன் அறி என்றார் வள்ளுவர். இல்லாமைக்கான, இயலாமைக்கான காரணத்தை அறிந்து கொள்கிறவர், தமது கடமையையும், காப்பாற்றும் நிலைமையையும் உணர்ந்துகொண்டு, மனம் சுணங்கிப் போகாமல், கடமை குலைந்து போகாமல், மீண்டும், உலகுக்கு உதவுவதையே உயிர் மூச்சாகக் கொள்வர், என்று ஒப்புரவாளரின் நன்மைகள் புரியம் திண்மையான வாழ்க்கை உண்மை நிலையை எட்டாம் குறளில், பெருமிதமாக விளக்கிக் காட்டுகிறார்.