பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை | 19 புதிய உரை: - நல்ல இதயம் இல்லாத உடலில் உலா வருகிற உயிர் கொண்ட வாழ்க்கை, பாறையின் மேல் பட்டமரம் தளிர்க்க முனைந்த அவல நிலைக்கு ஆளாகி அழிந்துவிடும். விளக்கம்: உடலுக்கு உயிர் போல வாழ்க்கைக்கு அன்பு. வேருக்கு மண்போல மரத்திற்கு நீர் போல வாழ்க்கைக்கு அன்பு. அன்பானது மலர்ச்சி பெற்ற உடலிலும் எழுச்சி பெற்று புத்துணர்ச்சி பெறும். அன்பு இல்லாது இருப்பது இதயமில்லாத உடல். உயிர் இல்லாத உடல். இதற்கு என்ன பெயர்? மர வளர்ச்சிக்கு மண்ணும் நீரும் முக்கியம். வாழ்க்கை எழுச்சிக்குப் பண்பான இதயமும் பலமான உயிரும் முக்கியம். அங்கே மரம் விளைந்து பயன் தருவது போல, இங்கே அன்பு வளர்ந்து இனிய வாழ்வைத் தரும். அன்பின் வளர்ச்சிக்கு நல்ல இதயமும் உயிரும் வேண்டும் என்று இந்த எட்டாவது குறளில் வலியுறுத்துகிறார். 79. புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை அகத்துறுப்பு அன்பி லவர்க்கு பொருள் விளக்கம்: அகத்துறுப்பு - உள் உறுப்பாகிய சீவன் என்கிற ஆன்மாவிலே அன்பிலவர்க்கு = அன்பெனும் குணம் அமையாத போது யாக்கை = சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் உடலில் உள்ள புறத்துறுப்பு எல்லாம் = வெளிப்புறமாய் அமைந்திருக்கும் பஞ்சேந்திரியங்களால் எவன் செய்யும் - என்ன செய்ய முடியும்? சொல் விளக்கம்: அகத்துறுப்பு உள் அவயவம்; மனத்திற்கு உறுப்பு போல்வதாகிய குணம். அகம்= சீவன், ஆன்மா, மனம். முற்கால உரை: உள்ளன்பு இல்லாதவர்க்கு பிறவுறுப்புகளிருந்தும் பயனில்லை.