பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 227 வாழ்க்கையின் மானம் காக்கும் உடையும், மகிழ்கிற மனத்துக்கும், திருப்திக்கும் உதவுகிற உணவும் கிடைக்காமல் போய், உறவைக் காப்பாற்றுகிறவனே நிலை குலைகிறபோது, காப்பாற்றப்படும் சுற்றத்தின் கதி ஆகவே, தன்னைக் காக்கவும் தன்னை நம்பியுள்ளவர்களைக் காக்கவும் பொறாமை வேண்டாம் என்று 6 வது குறளில் வள்ளுவர் கூறுகிறார். 167. அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் பொருள் விளக்கம்: அவ்வித்து = அறிவு நிறைந்த அறிஞனாக இருந்தாலும் அழுக்காறு உடையானை = பொறாமை கொண்டவனை செய்யவள் = செம்மையுடைய அவனது நிலையில் (வாழ்வில்) தவ் = தன்னியல் பிறழ்ந்து சுருங்கிப் போகின்ற வையை = கூரிய (அதாவது) மிகுந்த அழிவு நிலையை காட்டிவிடும் = கொடுத்து விடும். சொல் விளக்கம்: அவ் = அறிவு; வித்து = அறிஞன் செய்யவள் = செம்மையுடைய செழுமை நிலை தவ் = தன்னிலை பிறழ்ந்து சுருங்குதல்; வையை - மிகுதிநிலை முற்கால உரை: பொறாமை உடையவனை, திருமகள் பொறாமைப்பட்டு, தன் தமக்கையைக் காட்டி நீங்குவாள். தற்கால உரை: பொறாமை உடையவனை, செல்வத்தின் உருவகமாக கற்பனையாகக் கூறப்படும் திருமகள் கண்டு பொறாமைப்பட்டு, மூத்தமகளுக்கு அடையாளம் காட்டி விட்டு, அவனை விட்டு நீங்கி விடுவாள். புதிய உரை: அறிவு நிறைந்த அறிஞனாக இருந்தாலும், பொறாமை கொண்டவனாக இருந்தால், அவனது செம்மை நிலையிலிருந்து சுருங்கி, அழிவு நிலையை அடையச் செய்து விடும். விளக்கம்: அவ்வித்து என்பது பொறாமைப்பட்டு என்னும் பொருள் இருப்பது போல, அவ்வித்து என்றால் அறிவு நிறைந்த அறிஞன்