பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா كطقص= தீர்த்துத் திளைக்கிற அந்த ஒப்பற்ற உபகாரி, பெற்றான் எதைப் பெற்றான்? பொருளைப் பெற்றான். அதாவது தலைமை இடத்தைப் பெற்றான். எங்கே பெற்றான் வையகத்தில். வையகத்தில், தனது வள்ளல் தன்மையால், பெருமை பெற்றவனாக, தலைமை இடத்தைப் பெற்றான். பொருள் என்பது பொருள் பொதிந்த சொல்லாகும் திரவியம் என்றொரு அர்த்தம். காற்று, தண்ணிர், வெப்பம், பூமி, ஆகாயம் என்பது இதற்கு அர்த்தம். இயற்கைக் கூறுகளாகிய பஞ்ச பூதங்கள் மக்களிடையே பிரபலம் ஆகி, வாழ்த்துதலுக்கும் வணக்கத்திற்கும் உரியதாக விளங்குவதுபோல, வயிற்றுப் பசியைத் தீர்த்து, வாழ்வு விசையை ஏற்படுத்தி, வாழ்வாங்கு வாழச் செய்கிற வள்ளல், அவன் வாழ்கிற இடம் மக்கள் மனங்களில். பெறுகிற புகழ் நிலையான ւյ3էՔ. ஈகையின் எல்லையிலா ஆற்றலை ஆறாவது குறளில் மிக அருமையாக வள்ளுவர் விளக்கியிருக்கிறார். 227. பாத்துண் மரீஇ யவனை பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது. பொருள் விளக்கம்: பாத்தூண் = கஞ்சி சோறாக இருந்தாலும் மரீயவனை = பகிர்ந்து உண்ணுகிற பண்பாளனை, பசியென்னும் = உணவு கேட்டு வேதனைப்படுத்தும், பசியென்கிற தீப்பிணி = நரக வேதனையானது தீண்டல் = (கொட்டினால் விடம் ஏறுவதுபோல) தீண்டுதல் அரிது - இல்லையாகும். சொல் விளக்கம்: பாத்து = கஞ்சி; ஊண் - சோறு; பிணி = கட்டுதல், நோய் தீ = நரகம்; சேர்ந்தார்க் கொல்லி, தீண்டு விடம் தீண்டல் முற்கால உரை: எஞ்ஞான்றும் பகுத்துண்டல் பயின்றவனை, பசி என்று சொல்லப்படுகிற தீய நோய் தீண்டுதலில்லை.