பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 4.3/ மனிதர்கள் வடிவும் கொண்டவர்கள். எப்படி வேண்டுமானாலும் காலத்துக்கேற்ப, தங்கள் களிப்புக்கு ஏற்ப, விரைவாக வேடத்தை மாற்றிக் கொள்வார்கள் என்பதையே வல்லுருவம் என்றார். விரைவாகத் தன் வடிவத்தை மாற்றி, உருவத்தைக் காட்டி, தோற்றத்தை ஒப்பனை செய்து, தமது ஆட்டத்தை ஆடவல்லார் கொதிக்கின்ற கூழில் கை வைத்தவர் போல, அவரது கதையும் கலங்கிப் போகும் என்னும் குறிப்பை, 3 வது குறளில் வள்ளுவர் காட்டியுள்ளார். 274. தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று. பொருள் விளக்கம்: தவமறைந்து - தவ வேடத்தில் மறைந்து கொண்டு அல்லவை செய்தல் = தீமைகளைச் செய்தல் புதல் மறைந்து = ஞானிகள் பின்னால் மறைந்து நின்று வேட்டுவன் - கொலையாளியாகிய வேடதாரி புள் = மதுபானத்தை (கையில்) சிமிழ்த்தற்று - வைத்துக் கொண்டு; கண் மூடி இருப்பது போலாகும். சொல் விளக்கம்: அல்லவை = தீயவை, தீமை: புதல் = புதர் புதர் = ஞானிகள், புல்; வேட்டுவன் = வேடன், கொலையாளி புள் = பறவை, மதுபானம், கள்குடிக்கை; கண்மூடி = அறிவிலி சிமிழ்த்து = கையகப்படுத்துதல்; கண்மூடல் முற்கால உரை: வலியில் நிலைமையான தவ வேடத்தின் கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதரின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். தற்கால உரை: தவவேடத்தில் மறைந்து கொண்டு, அத்தவத்துக்கு மாறான செயல்களை ஒருவன் செய்வது, புதர்க்காட்டில் மறைந்து கொண்டு, வேடன் பறவையைப் பிடிப்பது போன்றது.