பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை う7 – சொல் விளக்கம்: பரி - பாதுகாப்பு: ஆ = ஆன்மா காவாம் காப்பது பால் = அமுதம்: உய்த்து அனு! விக்க; சொரி = மிகுதி போ - அழிதல்; கா - விழிப்பாய் இருத்தல், காத்தல்; தம நிரம்ப முற்கால உரை: தமக்கு ஊழலல்லாத பொருள்கள் வருந்திக் காப்பினும், தம்மிடத்து நில்லாவாம். ஊழால் தமவாய பொருள்கள் புறத்தே கொண்டுபோய் சொரிந்தாலும் தம்மைவிட்டுப் போகா. தற்கால உரை: உரிமையற்றவை காவல் செயினும் போதலும், உரிமை உள்ளவை தள்ளினும் சேர்தலும் முறைமையாம். புதிய உரை: தீவினையால் ஏற்படுகின்ற அமுதப் பயன்களை களிப் பாக்கிக் கொண்டாலும் ஆன்மா ஏற்றுக் கொள்வதில்லை. அதுபோல, தீவினைப் பயன்களை மிகுதியாக்க கொள்ள விழிப்போடு முயற்சித்தாலும் அவை அழியாமல் துன்பங்களை நிரப் பிக் கொண்டேயிருக்கும் விளக்கம்: ஊழ் வினையானது இரு கூறாகப் பிரிந்து -2] οδ) ώ) ! உண்டாக்குகின்ற பயன்கள், உடலையும், ஆன்மாவையும், உறுத்திக் கொண்டேதானிருக்கும். நல் வினையால் ஏற்படும் நல்ல பயன்களால் உடல் வனப்பும், செழிப்பும் அடைகிறது. மனம் இளமையும், வளமையும் கொள்கிறது. ஆன்மாவோ முழுமை அடைகிறது. அதற்கு எதிர்மாறாக தீவினையால் ஏற்படுகின்ற பயன்களை ஆனந்தக்களிப்போடு ஏற்றுக் கொண்டாலும், போற்றிக் கொண்டாலும், அவனது ஆன்மா ஏற்றுக் கொள்வதில்லை. அவன் எவ்வளவுதான் பயன்களை அனுபவிக்க முயற்சித்தாலும், அந்தத் தீவினைத் துன்பங்கள் அழிந்து போகாமல், மீண்டும், மீண்டும் மனதுக்குள்ளே நிரம்பி, நெருடிக் கொண்டே இருக்கும். 377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது பொருள் விளக்கம்: வகுத்தான் - தீவினைகள் செய்தவன் வகுத்த முறைப்படுத்திய