பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 405 உலக வாழ்வைத் துறந்து, தனக்கு உள்ள உடமைகளைத் துறந்து, உள்ளத்தில் சுரக்கும் பற்றுக்களையெல்லாம் துறக்கும் தூய வினைகளே துறவற தர்மமாகும். அதுவே சீலம் நிறைந்த தவமாகும். ஆகவே தவம் என்பது, இயமம், நியமம் நிறைந்த விரதம் ஆகும். உடலால் உணர்வதும், மனதால் தெளிந்து எண்ணுவதும், எண்ணியதை சொல்வதும், சொல்லியதைச் செய்வதுதான் மனித இயல்பு என்றால், அவற்றையெல்லாம் அடக்கி, அறிவு வழி நடந்து, அனைத்துயிர்க்கும் துன்பம் இழைக்காமல், உதவுகின்ற உயர்ந்த சீலமே தவமாகிறது. இந்தத் தவம் தான், இல்லறத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவை என்றாலும், அவற்றில் ஈடுபட இயலாதவர்களாக அவர்கள் நடந்து கொள்கிறார்கள். ஆனால், துறவறம் பூண்டவர்கள், இந்தத் தூய பணியைத் தொடங்கி, தொடர்ந்து, வாழ் நாள் முழுவதும் ஒழுகி, உதவி, உயர்ந்தோங்கி வாழவேண்டும் என்பதை வற்புறுத்தி, தவம் எனும் அதிகாரத்தை வள்ளுவர் தந்துள்ளார்.