பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கொல்லாமை = உயிர்வதை செய்யாமை ஆகும். மற்று அதன் அதைத் தொடர்ந்து பின்சார அந்தப் பெருமையைப் பற்றிக் கொள்ள பொய்யாமை = கொல்லா ஒழுக்கத்திலிருந்து தவறாமை நன்று = நன்மை பயப்பதாகும். சொல் விளக்கம்: ஒன்றாக - நிச்சயமாக; நல்லது அறமாகிய ஒழுக்கமானது பின் = பெருமை; சாரா பற்றிக்கொள்ள பொய்யாமை - தவறாமை முற்கால உரை: நூலோர் தொகுத்த அறங்களுள், தன்னோடு இணைப்பதின்றி. தானேயாக நல்லது கொல்லாமை. அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று. தற்கால உரை: இணையில் லாத, நல்ல ஒரு அறமாகக் கருதப்படுவது கொல்லாமை ஆகும். அதற்கு அடுத்த நல்லறமாக வைத்துக் கருதத் தக்கது பொய்யாமை ஆகும். புதிய உரை: நிச்சயமாக நன்மை பயக்கும் ஒழுக்கமானது உயிர்வதை செய்யாமை ஆகும். அதைத் தொடர்ந்து பெருமைமிக்க அந்த ஒழுக்கத்தைப் பற்றிக் கொண்டு தவறாமல் தொடர்வது நன்மை பயப்பதாகும். விளக்கம்: கொல்லாமையின் சிறப்பை வலியுறுத்த வள்ளுவர் நிச்சயமாக என்று சொல்லுகிறார். நன்மை பயக்கும் ஒழுக்கங்களில் கொல்லாமை முக்கிய இடத்தை வகுப்பதால், அதன் பெருமையைப் பற்றிக் கொள்ளுங்கள். அதிலிருந்து தவறாமல் ஒழுக்க வாழ்வைத் தொடருங்கள் என்று, நல்லதொரு நடைமுறை வாழ்க்கையை மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறார். 324. நல்லாறு எனப்படுவது யாதெனில் யாதொன்றும் கொல்லாமை சூழும் நெறி பொருள் விளக்கம்: நல் ஆறு என வாழ்வுக்கு நல்ல வழியென படுவது மனதில் புலப்படுவது