பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா மன ஒழுக்கம், உடல் ஒழுக்கம் ஆகிய இரண்டுமே வாழ்க்கையின் கண்கள். ஒழுக்கம் கெடுகிறபோது, உடலும் மனமும் புண்களாகிப் போகின்றன. - அதனால் அறத்துப்பாலில் உள்ள அதிகாரங்கள் முழுவதும் ஒழுக்கத்தை உயிராகக் காத்து, உன்னதமாக வளர்க்கும் நோக்கத்துடனேதான் உருவாக்கப் பட்டிருக்கின்றன. புறங்கூறும் பழக்கம் பழுது பட்டு ஒழிந்தால், பயனில் சொல்லுகின்ற தன்மையே அற்றுப்போகும் என்பதால்தான், புறங்கூறாமைக் குப் பிறகு, பயனில் சொல்லாமை வைக்கப்பட்டிருக்கிறது. பேசுகிற நாக்காகிய நா என்ற சொல்லுக்கு வார்த்தை அயலார், தீச்சுவாலை, பொலிவு என்று பல பொருள்கள் உண்டு. நா பேசுகிற வார்த்தையானது, எப்போதும் அயலாரைப் பற்றியே, அதுவும் தீச்சுவாலை எனும் வெம்மையை வெளிப்படுத்தும் வண்ணம் அனலைக் கக்குகிறது என்பது இயற்கையாகவே அமைந்திருக்கிறது. அவற்றை அகற்றிவிட்டு, நாவிற்குப் பொலிவும், வார்த்தைக்குத் தெளிவும், வாழ்க்கைக்கு வலிவும் வருகிற வண்ணம் சொற்கள் அமைய வேண்டும் என்ற குறிப்பை, வள்ளுவர் சொல்லாமல் குறித்துக் காட்டுகிறார்.