பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/426

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை அகத்தால் வருந்தாமல், உடலால் பொருந்தாமல், மன சாட்சிக்கும் திருந்தாமல், தூயவர்கள் என்று வேடமிட்டு வெளிச்சம் இட்டு, தீயனவற்றைச் செய்து வாழ்கிற வாழ்க்கையே, கூடாவொழுக்கம் எனப்படுகிறது. பிறருக்குத் தெரிந்து, இழுக்கமாக வாழ்வது மட்டும் கூடாஒழுக்கம் அன்று. பிறருக்குத் தெரியாமல், கொண்டிருக்கும் கொள்கை முறை வாழ்க்கைக்கு மாறாக செய்கிற வேறு செயலும் கூட, கூடாஒழுக்கமே ஆகும். அப்படி வாழ்கிறவர் கூடார் என்றே அழைக்கப்படுகின்றார். அப்படிப்பட்டவர் துறவறத்திற்கு மட்டும் பகைவர் ( கூடார்) அல்லர். மனித இனத்திற்கே மாபெரும் வைரியாகவே கருதப்படுவார். கூடும் ஒழுக்கத்தால், தவசியர் நிலை பெறுவர். கூடா ஒழுக்கத்தால் அவசியர் நிலை குலைவர். துறவிகள் நிலை குலையா வண்ணமும், இல்லறத்தார் மனம் கொள்ளும் வண்ணமும், கூடா ஒழுக்கம் எனும் அதிகாரத்தை, மன ஒருமையை வளர்க்கும் தவத்தின் பின்னே வைத்திருக்கிறார்.