பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 18 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா = * * புதிய உரை: நல்ல வலிமையுள்ள உடம்பு இல்லாதபோது, சூரிய ஒளியும் மிகுதியாக வருத்தும். அதுபோல ஒழுக்கநிலை இருந்தாலும் அன்பில்லாத ஒருவர் வேதனைப்படுவர். விளக்கம்: இயற்கையின் ஆற்றலை எதிர்க்கவும், இதமாக ஏற்றுக் கொள்ளவும் கூடிய சக்தி, வலிமையான உடலுக்கு மட்டுமே உண்டு. ஆகவேதான், அன்றாடம் உதவுகிற ஆதவன் கூட, அவன் தரும் ஒளியை, வெப்பத்தை, அனுபவிக்க முடியாமல் அல்லல் பட நேரிடுகிறது. வலிமையில்லாத உடம்பால் என்று 7 வது குறளில் அன்புக்கும் நல்ல ஒழுக்கத்திற்கும் உடலும், மனமும், சீவனும் வேண்டும் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறார். எலும்பில்லாத புழு என்னும் உரைக்குப் பதிலாக வலிமையற்ற உடல் என்று இங்கே பொருள் கண்டிருக்கிறோம். 78. அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல்மரம் தளிர்த்து அற்று. பொருள் விளக்கம்: அன்பகத்தில்லா = நல்ல இதயம் இல்லாத (உடலும்) உயிர் வாழ்க்கை= அதில் வாழ்கிற உயிரும் அதனோடு வாழ்கிற வாழ்க்கையும்; வன்பாற்கண் = வளமே இல்லாத கடும் பாலை நிலத்தில்; வற்றல் மரம் = பசுமையிழந்த மரமானது தளிர்த்து = மீண்டும் துளிர்விட்டு வளர்வது இன்றி அற்று = அழிவது போல அழிந்து போய்விடும் சொல் விளக்கம்: அன்பகத்தில்லா = நல்ல இதயம் இல்லா உயிர்வாழ்க்கை அற்று = அழிவதுபோல அழியும். முற்கால உரை: அன்பில்லாத உயிர்வாழ்க்கையானது வன்னிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போலும் என்பதாம். தற்கால உரை: அன்பைத் தன்னிடத்துக் கொள்ளாதவர் வாழ்வை வலிய பாறையின் மேல் பட்டமரம் தளிர்த்தது என்று கூறுவது போன்றது.