பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 33. கொல்லாமை கொல்லா மெய் என்று இந்த அதிகாரத்தைப் பிரித்திருக் கிறேன். அதாவது எந்த உயிரையும், சாவுக்கு ஆளாக்காத, சத்திய வாழ்க்கையில் வாழும் சுத்த தேகம் என்று சொல்லலாம். ஒரு உயிரைக் கொல்லுதல் என்பது. உயிரைப் பிரிக்கும் சாவாகும். இது ஒரு முறையாகும் இன்னொரு முறை கொல்லாமல் கொல்லுவது. உடல் துடிக்கும், மனம் கொதிக்கும். ஆன்மா வெடிக்கும். ஆனாலும் உயிர்பிரியாது. இதுதான் கொல்லாமல் கொல்லும் முறை. உடலால் மரணம், மனதால் நோவு. ஆன்மாவால் வேதனை. மரணம் என்பது நச்சுக்காயம். நோவு என்பது, துடித்துத் துவள்வது. வேதனை என்பது வெந்து, குலைவது. ஆக, அற்பமானவர்கள் பெறுகிற அற்ப சந்தோசத்திற்காக உயிர் வதை செய்வது, இது உலக இயற்கை. ஒழுக்கத்தை வலியுறுத்துகின்ற அறத்துப்பாலில், வள்ளுவர் கொல்லாமையைச் கூறுகிறார் என்றால், அது ஒழுக்கத்தின் உச்சக்கட்ட நிலையாகும் என்பதால்தான். தீமையின் முடிவு சாவை நோக்கிச் செல்கிறது. அதனால்தான் இன்னா செய்யாமை வேண்டு மென்ற வள்ளுவர், உயிர்வதை செய்யக் கூடாது என்ற கொள்கையை, அடுத்ததாக, கொல்லாமை அதிகாரத்தில் வைத்திருக்கிறார். 321. அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும் பொருள் விளக்கம்: அறவினை எனில் = புண்ணிய செயல் என்பது யாது கொல்லாமை - அரக்கத்தனமாக உயிர் வதை செய்யாமை கோறல் = அப்படிக் கொல்லும் கொலை ஞனாகிறபோது பிறவினை - அகிலத்திலுள்ள பாவங்கள், காமக்குரோதங்கள் எல்லாம் - சகலமும் தரும் - அவனைத் தொடர்ந்து வந்து சாடும் சொல் விளக்கம்: அறவினை = புண்ணியச் செயல்; யாது - அரக்கத்தனம் கொல் = உயிர்வதை கோறல் - கொல்லுதல் பிறவினை - காமம், பாவம் போன்றவை எல்லாம் - சகலம், அகம்