பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 552 * காண்பது - அறிந்து காப்பதுதான் அறிவு = அறிவாகும். சொல் விளக்கம்: பொருள் = பொன், உடம்பு, திரவியம் அரும்பாண்டம் மெய்ப்பொருள் = உண்மையான உடலின் பெருமை முற்கால உரை: யாதொரு பொருள், யாதோர் இயல்பிற்றாய் தோன்றினும் அத்தோன்றிய வாற்றை கண்டொழியாது, அப்பொருளின்கண் நின்று மெய்யாகிய பொருளைக் காண்பதே மெய்யுணர்வாவது. தற்கால உரை: எந்தப் பொருள் எப்படிப்பட்ட வகையில் தோன்றினாலும், அதனுடைய தோற்றத்தை மட்டும் கொண்டு மயங்காமல், அந்தப் பொருளின் மெய்யான பொருளைக் கண்டறிவதுதான் உண்மையான அறிவாகும். புதிய உரை: ஒரு உடலானது எந்த மாதிரி குணம், சுபாவம் கொண்டிருந் தாலும் அந்த உடம்பினை அரும் பாண்டம் என்று உணர்ந்து, பொன்போலக் காப்பதுதான் அறிவாகும். விளக்கம்: உடலானது மூன்றுவிதமான அமைப்புகளால் உருவான தோற்றம் கொண்டது என்பர் மேல் நாட்டு அறிஞர்கள். 1. குண்டான, குள்ளமான உடலமைப்பு (Endomorph) 2. உயரமான, வாட்டசாட்டமான அரக்க உடலமைப்பு (Ectomorph) 3. நடுத்தர நளளினமான உடலமைப்பு (Mesomorph) இந்த மாதிரி உடல் அமைப்புகளில், குணம் (Quality): சுபாவம் (Quantity) போன்ற தன்மைகள் உடம்புக்கு உடம்பு மாறுபட்டு இருக்கும். வலிமையோ, எளிமையோ, வறுமையோ, வெறுமையோ, இல்லாமையோ, இயலாமையோ, இப் படி ஏதாவது ஒன்று இருந்தாலும் அப்பாண்டத்தை (சட்டி, கடம்) உண்மை என்று உணர்ந்து அறிந்து, தெளிந்து காப்பதுதான் ஆன்மாவின் அறிவு என்பார்கள். அறிவு என்றால் அறிய வேண்டிய ஞானம் என்று பொருள். உடலைக் காப்பதில், எல்லா மனிதர்களும். ஞானவான்க ளாகத் திகழ வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் பேராவல் ஆகும்.