பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 357 விளக்கம்: இசையிலாயாக்கை என்றார். புகழில் லாத யாக்கை. பொருளில்லாத உடல். வலிமையில்லாத தேகம். செயல்பட முடியாத சரீரம். இப்படிப் பல பெயர்களிலும், பயனற்றதாகப் பேசப்படும் பலமில்லாத உடல் - வளம் இல்லாத அமைப்பு. இப் படிப் பட்ட 9_L_ᎶᏈ ᎶᏬ , பதவி (அதிகாரம்)யில் அமர்த்தினால், அந்தப் பதவியும் பெருமை இழக்கிறது. பதவியால் விளையும் பயன்களும், பரிவுமிகு கொடைகளும் கூட அளிக்க முடியாமல் போகிறது. தசைப் பிண்டம் (உடல்) ஒன்று, தட்டுக்கெட்டுப்போய் ஒரு பதவியில் அமர்ந்தாலும், கடமையாற்ற முடியாமல் போகிறதே என்ற வள்ளுவர், மிகவும் பொருள் பொதிந்த சொற்களை வைத்து, இந்தக் குறளை யாத்திருக்கிறார். நிலம் என்றும் (பூமி), வண்பயன் என்றும், குன்றும் என்றும் கூறியதாலே, பூமி அந்த உடலைத் தாங்கிப் பொறுத்துக் கொண்டது. அவரைச் சுமப்பதன் காரணமாக, விளைச்சல் குறைகின்றது என்று உரை எழுதிவிட்டார்கள். பூமி ஒரு பேதையைத் தாங்குவதால், விளைகின்ற பயன்குறையும் என்பதைவிட, ஒரு பதவி, பயனற்ற ஒரு மனித உடலைச் ஏற்றுக் கொண்டிருப்பதால், அந்தப் பதவியை ஆளத் தெரியாத அந்த ஆற்றலற்றவன், பதவியின் மூலம் பொழிய வேண்டிய பரோபகார உதவிகளைச் செய்யும் திறமையை இழந்து நிற்கிறான். அந்த இழப்புதான், பதவிக்கு மட்டும் பழியை ஏற்படுத்தாமல், பதவியில் அமர்ந்தவனையும், பதவிக்குரிய அதிகாரத்தில் கொடுக்கின்ற கொடையும், வழங்குகிற உதவியும் நின்று போய், குன்றிப்போகிறது. ஆற்றலிலாதான் கொண்ட படை இன்னா என்பது போல, இசையிலா யாக்கை பெற்றவன் பதவியும், இன்னாததுதான் என்று ஒன்பதாம் குறளில், உறுதியற்ற உடலிள் கீழ்மையை, உலக வாழ்வின் உண்மையைத் , தெளிவாக விளக்கிக் காட்டுகிறார்.