பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: மனத்தாலும் உடலாலும் விருந்தினர்கள் மற்றும் தம்மைச்சுற்றி உள்ளோர் துயர்தீர்த்து வாழும் வாழ்க்கையில் தவறுகளே நடக்காது. எப்பொழுதும் தண்மையும் சீலமும் தொடரும். விருந்துட்டித் துயர் தீர்க்க. மனம் குளிரச் செய்ய, மனதும் உடலும் பொருந்த வேண்டும் என்று இந்தக் குறளில் வலியுறுத்துகின்றார். அதனால்தான் அறத்தாற்றின், புறத்தாற்றின் என்று அற்புதமாக இரண்டு சொற்களைப் பெய்திருக்கிறார். 47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை பொருள் விளக்கம்: இயல்பினான் = ஒழுக்க நெறிகளுடன் இல்வாழ்க்கை = வீட்டு வாழ்க்கையை வாழ்பவன் என்பான் = என்று பெருமையைப் பெறுகிறவன் வாழ்பவன் = சிறப்புற வாழ்ந்து காட்டுகிறவன் ஆவான் - முயல்வாருள் = மற்றபடி தகுதி, பகுதி, செல்வம், கொண்டு சமுதாயத்தில் உயர்ந்துள்ள மற்றவர்களை விட எல்லாம் = எல்லா நிலையிலும் தலை = பெருமை மிகுந்த தலைமை இடத்தை வகிக்கிறான். சொல் விளக்கம்: இயல்பு = ஒழுக்கம், நற்குணம், பலம்; முயல்வாருள் = பதவி அதிகாரம் பெற்றவர்கள், பெற முயல்பவர்கள் முற்கால உரை: அறவியல் போடு இல்லறத்தில் வாழ் பவன், தவஞ் செய்வார்க்கெல்ல்ாம் தலையாவான். தற்கால உரை: இயல்பான அறமுறையில் இல்வாழ்க்கை வாழ்பவன், தம்மை மேம்படுத்த முயலும் முயற்சியாளர் அனைவரையும் விட, முதன்மையானவன் ஆவான். புதிய உரை: ஒழுக்க நெறிகளுடன் வாழ்பவன் பெருமையுடையவன். தகுதி, பகுதி, செல்வம் கொண்டு உயர்ந்துள்ள மற்றவர்களை விடத் தலைமையானவன்.