பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 87 தன்னைக் கொள்கிற அறனின் (உடல்) வளமை, அழகு, செல்வம் இவற்றிற்கு ஏற்ப தகுதியுடையவளாகவும் தன்னை தயார் செய்து கொள்ளவேண்டும். அப்பொழுதுதான் சிறந்த வாழ்க்கைத்துணை நலமாக வாழ முடியும். 52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனை மாட்சித்துஆயினும் இல் ப்ொருள் விளக்கம்: மனைமாட்சி = வீட்டிற்குப் பெருமை, அழகு சேர்க்க இல்லாள் - இல்லத்தை ஆள்கிற வாய்ப்பு பெறுகிற ஒரு பெண் கண் இல்லாயின் = (வலிமையான) உடல் இல்லாது இருந்தால். எனை மாட்சித்து ஆயினும் = அவள் எவ்வளவு அழகும் பெருமையும் பெற்றிருந்தாலும் வாழ்க்கை இல் = வாழ்க்கையில் எதுவுமே இல்லாது போய்விடும் சொல் விளக்கம்: மனைமாட்சி = வீட்டிற்குப் பெருமை சேர்க்க கண் இல்லாயின் = வலிய உடல் இல்லாதிருந்தால் முற்கால உரை: இல்லறத்திற்குரிய குணம், மனையாளிடத்தில் இல்லையேல், அவ்வில் வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாயினும் பயனில்லை. தற்கால உரை: நல்லொழுக்கம் உடைய மனைவியைப் பெறாதவனின் குடும்பம், பிற வகையில் எவ்வளவு பெருமை உடையதாக இருந்தாலும் பிறர் மதிக்க மாட்டார்கள். புதிய உரை: வீட்டிற்கு அழகும் பெருமையும் சேர்க்க வருகிற பெண், உடல் வலிமை இல்லாது போனால், அவள் எவ்வளவு அழகும் பெருமையும் பெற்றிருந்தாலும் வாழ்க்கையில் எதுவுமே இல்லாமல் வீணாகிப் போகிறது. விளக்கம்: பெண்ணுக்கு அழகு, அறிவு, குடிப்பெருமை, செல்வவளம் எல்லாம் இருந்தும், உடல்வளம் தேகநலம் இல்லாமல் போனால் அவளது துணையும் வீணாகிறது. வாழ்க்கையும் அழிந்துபோகிறது. அதனால்தான் வாழ்க்கை இல் என்றார்.