பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 67 சிவிகை = பல்லக்கு, வையம் பொறுத்தான் = பொறுமை, தோன்றல் ஊர்தல் = நடத்துதல் மேம்படுதல் இடை = இடையீடு, துன்பம், காரணம் முற்கால உரை: அறத்தின் பயன் அதுவென்று யாம் ஆகம அளவை யான் உணர்தல் வேண்டா. சிவிகையைக் காவுவானோடு செலுத்து வானிடைக் காட்சியளவை தன்னாலே உணரப்படும். - தற்கால உரை: பல்லக்கைச் சுமந்து செல்பவனுக்கும், அதன்மேல் அமர்ந்து செல்பவனுக்கும் இடையேயுள்ள வேறுபாடு, அறத்தின் பயன் என எண்ணவேண்டா. (அது பொருள் செல்வத்தால் ஏற்பட்டதாகும்) o புதிய உரை: = இவ்வுலகைப் பொறுமையுடன் நடத்துகிற தலைவனுக்கு இடையூறுகளும், துயரங்களும் ஏற்படுவது போலவே, அறம் செய்பவனுக்கும் உண்டாகும். ஆயினும் அறம் செய்க. விளக்கம்: வையத்துக்குத் தலைமை ஏற்று வழி நடத்த, பொறுமையும் திறமையும் கொண்டு முயற்சிக்கிற ஒருவனுக்கு, வேண்டாத இடையூறுகளும் துன்பங்களும் ஏற்படும். அதற்காக அவன் தன் முயற்சியில் தளர்ந்து போவதில்லை. அதுபோலவே, அறவினைகளில் தொடர்ந்து வாழ்கிறபோது, வேண்டாத பல இடையீடுகள், தடைகள் வந்துசேரும். அவற்றைப் பொறுமையோடும் திறமையோடும் தாங்கிக் கொண்டு தளர்வில்லாமல் அறங்களைத் தொடர்ந்தாற்ற வேண்டும். அறங்கள்தாம் ஒழுக்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தக் குறளில் உடல், மனம் இவற்றை வென்று அறவினையை மேற்கொள்ளும் அறனுக்கு, சுற்றுப்புறச் சூழ்நிலைகளிலும் இருந்து தடை வரும் என்று குறிப்பிட்டுக் காட்டுகிறார். வையத்தைக் காத்து வழி நடத்துபவர் போல, தன் மெய்யகத்தைக் காத்து மேம்பட வேண்டும். இதுவே புகழுக்கான வழியாகும்.