பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 95 முற்கால உரை: கற்பாகிய கீர்த்தியையுடைய மனையாள் இல்லாதவர்க்குப் பகைவர்முன் சிங்கம் போன்ற நடையில்லை என்பதாம். தற்கால உரை: o கற் பின் மூலம் புகழைக் காக்க விரும்பும் மனைவியைப் பெறாதவர்க்குத் தம்மைப் பழித்துப் பேசும் பகைவர்முன். காளையாகிய ஏறு போல நடக்கும் பெருமிதமான நடை இருக்க இடமில்லை. புதிய உரை: அரும் செயல் செய்து வெல்லும் இல்லறம் அமையாதோர்க்கு இகழ்ந்துரைப்பவர்முன், நிமிர்ந்து நடக்கும் நடை இல்லை. விளக்கம்: உறவினர்.முன் புகழப்படுவதைவிட, புறம்பாளராகிய பகைவரால் புகழப்படுவதே பெருமை என்பது வள்ளுவர் நெஞ்சம். அருஞ்செயல் செய்து வெற்றிவாழ்வு வாழ் பவர்களே தனது பகைவராலும் புகழப்படுவார்கள். அருஞ்செயலுக்கும் வெற்றிக்கும் அற்புத ஆற்றலுக்கும் அடிப்படையாக அமைவது வலிமை சார்ந்த உடல் அல்லவா! இதுவரை துணைநலமாக வருகிற பெண்ணுக்குரிய தகுதிகளைக் கூறிவந்த வள்ளுவர் அந்தத் துணைநலத்தை ஏற்கும் அறனும் வலிமையோடு வாழ்கிறபோதுதான் புகழ்புரியும் வாழ்வு அமையும். இல்வாழ்க்கையும் அமையும். அப்படி இல்லையென்றால் பீடற்ற வாழ்க்கை. ஒழுக்கமற்ற நடைமுறை அமைந்து யாவரும் இகழ்கிற நிலைமைக்கு ஆளாகி விடுவர். 60. மண்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு பொருள் விளக்கம்: மனைமாட்சி = இல்லறத்தின் மேன்மை, சிறப்பு மண்கலம் என்ப = மண்கலம் போன்றது மற்றதன் = அதற்கு அடுத்தது; நன்கலம் = நல்ல பயன்படு பாத்திரம்போல; நன்மக்கட் பேறு = நல்ல குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுக்கும் பெருமையாகும்.