பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 491 32. இன்னா செய்யாமை இன்னா செய்யாமை என்ற இந்த அதிகாரத் தலைப்பு இன்னா + செய்யா + மெய் என்று பிரிகிறது. இன்னா என்பதற்கு கீழ்மையான தீமை, நெறி கெட்டகேடு, தன்மையற்ற தவறு, தீண்டப்படாத தீமை, கொடுமையான குற்றம் புலம் அழிக்கும் பொல்லாங்கு என்றெல்லாம் பொருள்கள் உண்டு. இப்படிப்பட்ட குற்றங்கள், தவறுகள், கேடுகள், தீங்குகள், தீமைகள் இவற்றைச் செய்யாத உடல். அதுவே சிறந்த, ஒழுக்கம் காக்கும் உடல் என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இன்னா என்பதற்குத் தவறு என்று ஒரு பொருள் உண்டு. தவறு என்ற சொல்லை உன்டாக்கித் தருகின்ற தவ் என்ற சொல்லிற்கு, தன்னியல் பிறழ்ந்து ஒழுகுதல். தன் ஆத்மா. தன்னொழுக்கம் என்பது ஆத்மாவின் ஒழுக்கம். அத்தகு ஒழுக்க நிலையில் இருந்து. தாழ்ந்து, இறங்கி, கிறங்கி கீழாக வருதல் என்று பொருள் வருகிறது. அதேபோல, 'தவ்' என்ற சொல்லுக்கு சிதைவு என்று பெயர். இப்பொழுது, நாம் ஒரு தெளிவான பொருளுக்குள் வருகிறோம் உடலாலும், மனதாலும், ஒம்பப்படுகின்ற ஒழுக்கத்திலிருந்து, பிறழ்ந்து சுருங்கா வண்ணம் செம்மாந்து நிற்கிற மெய்யே *T, . . ." . ..." H. o, so செய்யாமெய் எனப்படுகிறது. உடல் ஒழுக்கத்தில் சிதைவு, மன ஒழுக்கத்தில் சிதைவு - ஆத்ம ஒரு ஆக்கத்தில் சிதைவு எல்லாம், அறியாமையால் விளைவதைவிடத், தான்' என்ற ஆணவத்தால், திமிர் கொண்ட அகங்காரத்தால், ஆத்திரம் கொண்ட ஆத்மாவினால் ஏற்பட்டுவிடுகிறது. அதனால், கோபந்தான் அனைத்து அடாவடித்தனத்திற்கும் மூலமாக இருக்கிறது என்பதைக் குறித்துக் காட்டவே, வள்ளுவர், இன்னா செய்யாமை அதிகாரத்தை வெகுளாமைக்குப் பின் வைத்திருக்கிறார்.