பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - - *= - புதிய உரை: சமுதாயத்தில் மேலோர்களிடம் காட்டுகிற பணிதலை, மற்ற பொது மக்களிடமும் காட்டி பணிகிற அடக்கம் உவமையே இல்லாத வீரம் ஆகும். அந்த வீரமே இன்ப வாழ்க்கையையும் ஏராளமான நன்மைகளையும் அளித்துவிடும். விளக்கம்: பணிதல் என்பது எளிமையும் இரக்கமும் ஆகும். தன்னை விட உயர்ந்தவர்களிடத்தில் செய்கிற பணிதலில், பக்தியும் இருக்கும். பயமும் இருக்கும். அதில் பண்பாடும் மிகுந்து இருக்கும். ஆனால், தம்மைப்போல, அல்லது தம்மை விட கீழ் நிலையில் இருப்பவர்களிடமும் அதே பணிதலைக் காட்டுவது என்பது பேராண்மை. இவ்வாறு நடக்க இயலாததைச் செய்கிற போது அதுவே வீரத்தின் சிகரம் ஆகி விடுகிறது. அந்த வீரமும் தீரமும் அவருக்கு ஆற்றலையும் அற்புத மன எழுச்சியையும் வளர்த்து விடுகின்றன. அப்படிப்பட்ட செழிப்பும். பெருக்கமும் சுகங்களையும் நன்மைகளையும் ஏராளமாகத் தந்து விடுகின்றன. தன்னைப் போல் மற்றவரையும் மதிப்பதே அடக்கத்தின் தத்துவம் என்று 5 வது குறளில் வள்ளுவர் கூறுகின்றார். 126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து பொருள் விளக்கம்: ஒருமெய்போல் = வெற்றியைப் பெறத்தக்க உடல் போல ஐந்தடக்கல் = ஐம்பொறிகளை அடக்குவதற்கு ஒப்ப உன்மெய்யும் = எழுச்சிமிக்க மனமும் (உட்பகையை) ஆற்றின் = கட்டுப்படுத்தி விட்டால் எழுமெய்யும் - அவரைத் தொடரும் ஏழு பரம்பரைக்கும். ஏமாப்புடைத்து = பாதுகாப்பான வாழ்வைக் கொடுத்து விடும். சொல் விளக்கம்: ஒரு = ஆடு, வெற்றி, மெய் = உடல் (ஒருமெய் -ஒருமை) உள்மெய் = மனம். ஐந்தடக்கல் = ஐம்புலன்களை அடக்குதல் முற்கால உரை: ஒருவனைப் பொறியடக்க வல்லவனாகில் ஏழு பிறப்பிற்கும் உறுதி உடைத்து என்பதாம்.