பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5S2 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முடியும். அவரது உடல் நலிய நலிய, ஐம்புலன் துகர்ச்சிகள் அழிய அழிய, உடலால் வெறுமையாகிறார் வாழ்வையிலும் கருமைப் படிகிறது. உடலில் சக்தி இல்லாமையும், செயல்களில் வீரியம் இயலாமையும் சேர்ந்து கொள்வதால் அவர் தரித்திரர் ஆகிறார். வரம் பெற்று வந்த வாழ்வு சிரமற்றவன் தொங்குவதுபோல இருக்கிறது என்று எட்டாவது குறளில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். 379. நன்றாங்கால் நல்லவாக் காண்பார் அன்றாங்கால் அல்லல் படுவது எவன் பொருள் விளக்கம்: நன்றாம்.கால் - நல்வினையாற்றுவோரின் இரத்தக்கலப்பு உறவெல்லாம் நல்லவா - நல்லோர்களாகத் திகழ்வார்கள் என்பதை காண்பார் - கண்முன்னே கண்டு மகிழ்வார் அன்றாங்கால் - நல்வினை செய்யாத தீவினையாளர் பரம்பரைக்கு அல்லல் = துன்பங்கள் படுவது ஒன்றன்மேல் ஒன்றாக வருவதற்கு எவன் = யார் காரணம் (அவன்தான்) சொல் விளக்கம்: கால் = இரத்தக் கலப்பு, உறவு; காண்பர் = கண்முன்னே தெரிவர் அன்றாங்கால் = தீவினைகள் சந்ததி; அல்லல் = துன்பம் படுவது - ஒன்றன்மேல் ஒன்று உறுவது முற்கால உரை: நல்வினை விளையுங்கால் அதன் விளையாய இன்பங்களை துடைக்குந் திறன் நாடாது இவை நல்லனவென்று இயைந்து அனுபவிப்பார். ஏனைத் தீவினை ைெளயுங்கால் அதன் தொடர்பான துன்பங்களை அனுபவியாது நாடி அல்லலுறுவது எவன் கருதி. தற்கால உரை: நல்லவை உண்டாகும்போது அவற்றை நல்லவை என்று கருதி இன்பம் பெறுகிறவர்கள், தீயவை உண்டாகும்போது அவதியற்றுக் கலங்குவது எதற்காகவோ?. கலங்குவது கூடாது என்பதாம். புதிய உரை: நல்வினையாளர், தமது இரத்தக்கலப்பு உறவினர் எல்லோரும் நன்றாக வாழ்வதை அவரே கண்டு களிப்பார். தீவினையாளர்,